பக்கம்:நேசம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110லா. ச. ராமாமிர்தம்


அப்புறம் பொழுதும் போகாமல், அந்த நெஞ்சுப் புழுக்கத்தின் அனுபவ பயங்கரத்துக்கு, பயிர் செய்து பாழாய்ப் போனாலும் பரவாயில்லை என்று ஆகிவிட்டது. இந்தத் தடவை எட்டு லாரி மண் அடித்து, நிலமட்ட த் தையே உசத்தி, விவசாய இலாகா வெளியீடுகள், நர்ஸ்ரி விளம்பரங்கள், வானொலியில் பா ட ங் க ள், வருவார் போவார் யோசனைகள் எல்லாவற்றையும் கலந்து விசேஷ எருக்கள், விதைகள் வரவழைத்து-அதோ ஆபீஸ் அறை ஜன்னலடியில் விறைத்து நிற்கும் இரண்டு க்ரோட்டன்ஸ் அக்கரைச் சரக்கு என்கிறான் நர்ஸ்ரிக்காரன். வேண்டாம் வேண்டாம் என்க. அவரும் கிணற்றுக்கு ஒரு ; எச்.பி. மோட் உாரும் வெச்சுட்டார். இப்போது தோட்டம் அவள் நெஞ்சு மலர்ச்சியாக விளங்குகிறது. எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்னு பெரியவா கம்மாவாச் சொன்னா? வரும்போதே-கண்கள் பனித்தன-ஆம், இதுகள்தான் அன் குழந்தைகள், அவன் வரவேற்றன. இது ப்ரமையே அல்ல. நாளடைவில் உடலில் ஊறிப்போன உண்மை. வேளா வேளைக்கு அவள் கையாலேயே மொண்ட ஜலத்தை அவள் ஆாலேயே வாங்கி அம்மாவை அடையாளம் கண்டு கொண்டன. வேறு ப்ராணி வாலையாட்டும். முகரும், நிறுவிய இடத்திலேயே அசைவதும் சிவிர்ப்பதுமன்றி இவை இது வேறு என் இயலும் பார் அந்த வெண்டையை, தான் அதன் பக்கமாய் வருகையில், அதன் சக்திமீறி, எட்டித் தன்மேல் உராய்வதை! அடுக்கு தீபம்போல், அருநெல்லியின் நடுத்தண்டிலிருந்து விசிறும் கதிர்களும் கதிர்களில் தொடுத்த சரங்களாய்த் தொங்கும் இலைகளும் இன்று பூரா பார்த்துக்கொண்டே இருக்கலாம் -ஆனால் இந்தக் கறிவேப்பிலைக் கன்றை உருப்படி யாகப் பார்ப்பதற்குள் உன்பாடு என்பாடு ஆயிடுத்து கறிவேப் பிலையோ குழந்தையோ, குறைப் ப்ரசவம்போல் அஞ்சாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/116&oldid=1403567" இலிருந்து மீள்விக்கப்பட்டது