பக்கம்:நேசம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்வி111


தோற்றபின், மடிப்பிச்சை ஒருகன்று பக்கத்துப் பங்களாவில் வாங்கி வந்து பூந்தொட்டியில் பயிர் பண்ணி-அதென்ன நின்னால் குத்தம் உட்காந்தால் அபராதம் திரும்பினால் தண்டனை? இங்க்யுபேட்டர் சிசு தோற்றது. உனக்காச்சு எனக்காச்சுன்னு ஒரு வீம்பு, இப்போத்தான் தொ ட்டியி லிருந்து வேரோடு பறித்து, பூமியில் ப்ரதிஷ்டை பண்ணி மூணு நாளாறது. மண் மாற்றம் எப்படிப் பிடிக்கறதுன்னு: போகப் போகத் தான் தெரியணும். டாக்டர் கிறிஸ்டியன் பர்னார்டுக்கு எழுதிக் கேட்கலாமா? யார் கண்ணிலும் எதன் கண்ணிலும் படாமல்-ஒரு மஞ்சள் கனகாம்பரத்துக்கும் கத்திரி நாத்துக்குமிடையில், அவரைப் பந்தல் அடியில்... கூட்டில் இப்போத்தான் பொரித்த குஞ்சுபோல் சோனிக் குழந்தை அசிங்கமா ஆனால் வெகு அருமையா என்ன பாடுபட்டு என்ன? இந்த மண்வளம் இவ்வளவு தான். இங்கு குற்றம் மண்மேலா, விதையிலா? ஸ்ர்க்யூட் வாழையண்டை முடிந்தது. ஒரு கூட்டமாக ஐந்து ஆறு ஒண்னுகூட தார் போடவில்லை. அப்படியும் இலையை அடிக்கடி நறுக்குவதில்லை. ஆனால் அப்படி முழுக்கவும் சாதிக்க முடியாது. வேளையில்லா வேளையில், கட்சிக்காரன் விருந்தாளியாகத் தங்கிவிட்டால், நறுக்காமல் இருக்க முடிகிறதா? அப்புறம் அமாவாசை, ஒரு திவசம் திங்கள் எல்லாம் அப்பிடியும் இப்பிடியும்தான். அதனால் அதற்காக ஒண்னு கூடவா பூவைக்காது? 'வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில்," ஊன்றி ஆறு ஏழு மாதங்கள் ஆனதும் கன்றுகள் பக்கத் தில் முளைத்துவிடும். வெட்டித்தள்ளாவிடில் தலை மரத்தின் பலத்தை அதுகள் வாங்கிக் கொண்டுவிடும் என்று தெரிந்தவர் கள் சொன்னால், வெட்ட மனம் வல்லையே! வீட்டைச் சுற்றி முள்வேலி, வாசலுக்கு இரும்புக் கதவு பேருக்குத்தான். லொட்டை வீட்டுக்காரனுக்கு அதுபற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/117&oldid=1403568" இலிருந்து மீள்விக்கப்பட்டது