பக்கம்:நேசம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ராணி135


டுேக்கையறையைக் காவலாளிகள் எதிருக்கெதிர் ப்ரதட்சணத்தில் ஓயாமல் சுற்றினர். அறை உள்ளே, ஒரு மரத்தடுப்பின் பின்னால், உச்சந்தலையிலிருந்து உள்ளங் கால் வரை முகத்தையும் மூடியதோர் உருவம் மறைந்து கொண்டு ஊஞ்சலில் படுத்திருக்கும் அரசனையே கண்கூடக் கொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்தது. சமயத்துக்குக் காத்துக்கொண்டிருந்தது. அதன் பிரசன்னம் யாவரும் அறியார். பயம் ஒரு பக்கம், குடிபோதை இன்னொரு பக்கம், உடல் அசதி ஒரு பக்கம். கோழித் துரக்கத்தில் அரசன் ஏதோ முனகினான். அவன் புரளலில், ஊஞ்சல் ஆடி, முனகிற்று, ஆ அது என்ன, சங்கிலிமேல்? இத்தனை காவல் தாண்டி எப்படி வந்தது? ஆனால் அதனால்தான் வரமுடியும். கரும் பட்டில் தங்க நூலில் கட்டான்கள் நெய்தாற்போல் உடல் பளபளத்தது. கட்டுகள் பளபளத்தன. தங்கச் சிறகு கள் உடலினின்று விசிறித் தகதகத்தன. பிளந்த நாக்கு அவ்வப்பொழுது எட்டி எட்டிப் பார்த்து அது என்ன ஓயாத தேடலோ: சங்கிலிமேல் ஊர்ந்து வரும் அதன் பாதையை, சாமணையின் நாஸுக்குடன், அவ்வளவு அவகாசமாய்த் தேர்ந்து எடுத்துக்கொண்டு சங்கிலியில் வழிந்து... அரசனின் கால்மாட்டை அடைந்ததும், தலைதுாக்கி ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்த்தது. கொட்டாத விழி களில் முழு நீலம் கொதித்தது. அடிவானத்தில் திடீரென நட்சத்திரச் சிதர்போல், மண்டையிறக்கத்தில் தங்கப் பொட்டுக்கள் பளபளத்தன. அபயகரம்போல் படம் விரிந்தது. வாள் வீச்சின் வேகம் காற்றை விர்ர்ர்'ரென வெட்டிற்று. பாம்பு சங்கிலியினின்று தரையில் இரண்டு துண்டுகளாக விழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/141&oldid=1403593" இலிருந்து மீள்விக்கப்பட்டது