பக்கம்:நேசம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா181


ரயிலடியிலிருந்து டாக்டர் கிளீனிக்குக்கு நடக்கிறேன். இங்கே எவ்வளவு சந்தோஷமாக இப்போது இருந்தேன். ஆனால் இந்த ஊருக்கும் எனக்கும் தொப்புள்கொடி அறுந்து விட்டாற்போல சம்பந்தமே இல்லாததுபோல் தோன்றுகிறது, ஏன்? 'வா அம்பி. ஐ ஆம் ஸாரி” என்று சொல்வதில் அர்த்த மில்லை. உனக்கு ஷாக் ஆக இருக்கும். எனக்குத் தெரியும். இருந்தாலும் மனத்தெம்பு இல்லாவிட்டால் நாம் எல்லாரும் காலி. இந்தா இதை உன்னிடம் கொடுக்கும்படி அவருடைய உயில்.’’ கவரைப் பிரிக்கவில்லை, ஜே.பியில் போட்டுக்கொள் கிறேன். காத்திருக்கிறேன். "மானேஜர் ஒரு பதினைந்து நாளைக்கு முன் வந்தார். தொண்டை வலிக்கிறதென்று பரிசோதித்துப் பார்த்தேன். என் முக மாறுதலை எப்படியோ கவனித்துவிட்டார், "'டாக்டர், என்ன பாக்கி எனக்கு வர இருக்கு?" "எக்ஸ்ரே எடுக்கணும்.’’ ‘'எதுவாக இருந்தாலும், நீங்கள் என்னிடம் சொல்ல லாம், என் வீட்டில் என்னை விடப் பெரியவர்களும் இல்லை. நீங்கள் சொல்லப் போவதின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள எனக்குப் பிள்ளைகளும் இல்லை. ப்ளீஸ்...' 'கான்லர்,' " 'ஓ' உங்கள் மானேஜர் கடாத் தலையன். 'புகையிலைப் போட்டுக்கொள்வதன் விளைவு." 'அப்படியா? உடனே தன் டப்பியிலிருந்து சிவபுரி புகையிலைத் துளை அள்ளி வாயில் போட்டுக்கொண்டார், மானேஜர் கடாத் தலையர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/187&oldid=1403641" இலிருந்து மீள்விக்கப்பட்டது