பக்கம்:நேசம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184லா. ச. ராமாமிர்தம்


என்னிடமிருந்து 'வீல் வீல் வீல் - 'பாலா! பாலா! பாலா; ” அது வந்த திக்குக்கு எதிர் திக்கில் பறந்து சென்று விட்டது. நான் ஒரு நாத அதிர்வு இடிவலியின் அலையில் கரையில் தூக்கி எறியப்பட்டேன் அந்தரத்தில் தொங்கித் தவித்துத் திணறித் திக்கற்றுத் தெப்பலாடித் தத்தளிக்கிறேன் என் அதிர்வுக்குச் சொந்த அலையில் என்னை வளிக்கவ்வி எடுத்துச் சென்று மூலத்தின் இருண்ட கர்ப்பத்துள் என்னைச் சேர்த்துவிடு அங்கு நான் என்னை இழந்து கொள்கிறேன் ஆமாம் இதையெல்லாம் நான் யாரைக் கேட்கிறேன் கதை முடிந்தது கவிதை தன்னை முடித்துக்கொண்டு கண்ணாடிச்சுவரும் உடைந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/190&oldid=1403645" இலிருந்து மீள்விக்கப்பட்டது