பக்கம்:நேசம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் மீசை17


அப்பா சலூனுக்குப் போய் மயிர் வெட்டிக்கொண்டு, புதிதாய் மீசை வைத்துக்கொண்டு வந்தார். மெல்லியதாய், பென்சிலால் கோடு கிழித்தாற்போல், ஒரு துளிர் மீசை, அப்பா கண்ணாடிக்கெதிரில் உட்கார்ந்துகொண்டு, அதைத் தொட்டுத் தொட்டு, நுனியை முள்ளாய் முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தார். அப்பா படும் சிரமத்தைப் பார்க்க இவனுக்கே வேடிக்கையாயிருந்தது. இவன் பெரியவனாய்ப் போனால், இவனுக்குக் கூட மீசை வைத்துக்கொள்ளத்தான் இஷ்டம். இப்போதேகூட வைத்துக்கொள்ள இஷ்டம்தான்; ஆனால், ரோமம் முளைக்கமாட்டேன்ென்கிறதே! என்றாலும், அம்மாவுக்கு அது வேடிக்கையாயில்லை ஏனோ தெரியவில்லை. என்னவோ மொணமொன என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். 'பால்காரச் சின்னான் மாதிரி-விறகுவெட்டி வேலன் மாதிரி. பிராம்மனாளாய் லட்சணமாய் இருக்கப்படாதோ -போயும் போயும் புத்தி இப்படியா போகனும் முகத்திலே கொடுரம் வழியறது.’’ என்று அம்மா என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். அப்பா சிரித்துக்கொண்டு, இதையெல்லாம் விளையாட் டாய் எடுத்துக்கொண்டு, மீசையை முறுக்கிவிட்டுத் கொண்டேயிருந்தார். ஆனால், அம்மா படிப்படியாய்த் "தைரியமாய் மீறிக்கொண்டே வந்து, அப்புறம் கள்ளப் பார்ட்டு மாதிரியிருக்கு; இந்த ராட்சஸ் முழிக்கும் மீசைக்கும் சகிக்கவில்லை-பட்டாணித் துலுக்கன் மாதிரியிருக்கு." என்று புதுப்புது 'மாதிரி’களையெல்லாம் அடுக்க ஆரம்பித் ததும், அப்பாவுக்குச் சிரிப்பு எல்லாம் பறந்துபோய், கண் களில் சிவப்பு நரம்புகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. அப்புறம் என்ன? அவ்வளவுதான்-அம்மாவின் முதுகிலே 'பரீர்” என்று அறைதான்! - நே.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/23&oldid=1403447" இலிருந்து மீள்விக்கப்பட்டது