பக்கம்:நேசம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16லா. ச. ராமாமிர்தம்


போடா பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடுத்து...' லஜ்ஜையினால் முகம் சிவக்க குனிந்த தலையுடன், அவன் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினான். ப்போது வீட்டுக்குத் திரும்பவேண்டும். தி ரு அவன் வீட்டில் சண்டை நடக்கிறதே என்ற கவலை கொஞ்சங்கூட இல்லாமல், தெருவில் ஜனநடமாட்டம் வழக்கம்போல் நிறைந்துதான் இருந்தது. தெருவிலே, பெரிய வர்களும் ஆண்களும் வாலிபப் பெண்களும், பேசிக்கொண்டும் சிரித்து இடித்துக்கொண்டும் சென்றார்கள். மோட்டாரும் ஆண்டிகளும் பறந்தன. ஒரு ஜட்கா வண்டிக்காரன், தன் வண்டி ஒடிக்கொண்டேயிருக்கையில், சாட்டைக் கழியைச் சக்கரத்தின் பட்டைகளுக்கிடையில் கொடுத்து, "கடகட’ என்று சத்தம் உண்டுபண்ணி, குதிரையை ஜோராய் விரட்டி னான். அவனுங்கூடத் தமாஷாய்த்தான் இருந்தான். பெரிய கூடைபோல் ஒரு முண்டாக கட்டி, கிறுதா மீசையை ஷோக்காய் முறுக்கிவிட்டிருந்தான் அந்த ஜட்கா வண்டிக்காரன். - ஜட்கா வண்டிக்காரனின் மீசையைப் பார்த்ததும், இவனுக்கு அப்பாவின் மீசை நினைவு வந்தது; உடனே சண்டையின் ஞாபகமும் கூடவே வந்தது; முகம் மறுபடியும் தொங்க ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால், வீட்டில் சண்டை வந்ததே அப்பாவின் மீசையால்தான். நடந்ததெல் லாம் இப்போதுதான் இவனுக்குச் சரியாய் ஞாபகம் வந்தது. இவன் காகிதக் கப்பல் செய்வதில் முனைந்திருந்த போதிலும், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் நடந்த தர்க்கத்தை, இவனது_உள்நினைவின் ஒருபாகம், இவன் மனதிலே பதிவு செய்து கொண்டிருந்திருக்கிறது. :ي και δι, ,(ξ, irr τι carr τάπ -τα αιτ.: w ஆம். இப்போதுதான் எல்லாம் ஞாபகம் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/22&oldid=1403446" இலிருந்து மீள்விக்கப்பட்டது