பக்கம்:நேசம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் மீசை23


சோப்புப் போட்டுக் கழுவி வெளேரென்றிருந்த முகத்தில் லேசாய்ப் பவுடர் பூசி, நெற்றியில் பச்சைக் கலர் குங்குமப் பொட்டு வைத்திருந்தாள். இதுவரையில் அவன் பார்த்திராத அவ்வளவு எண் ணெய்ப் பளபளப்பு வடியும் வெண்பட்டும் ஜாக்கெட்டும் அவள் அணிந்திருந்தாள். மார்பிலே புடவை.மீது ஒரு ಅ– ಶಿಶ್ನ புதிசு - கல்விழைத்தது: ஒளிவீசும் தங்க புரூக் -அணிந்திருந்தாள். அப்பா புதிசாய் வாங்கிக் கொண்டுவந்து தந்திருப்பார் பக்கத்து அறையிலிருந்து அப்பா கூடத்துக்கு வந்தார். அப்பாகூட "ஜோராய் டிரஸ்" பண்ணிக்கொண்டிருந்தார், "நேரமாயிடுத்து-இவனுக்குச் சாதத்தைப் போட்டுத் துரங்கப் பண்ணு ’’ "கூடக் கூட்டிக்கொண்டு போவோமே!’ என்று, சிரித்துக்கொண்டே அம்மா சொன்னாள். அவளிடம் கோபத் தையே காணோம். 'ஆமாம், கூட ஒரு நாய்க்குட்டியிருந்தால் அதையும் கூட்டிண்டுவா...இது அங்கே போனால், துரங்கி வழியும்திரும்பி வருகிறபோது, எவ்வளவு நாழியாகிறதோ என்னவோ! ...பஸ் அகப்படுகிறதோ இல்லையோ! நடந்து வருகிறோமோ என்னமோ சுருக்கத் துரங்கப்பண்ணு.” அம்மா இவனுக்குச் சாதம் போட்டாள். சமத்தாப் படுத்துண்டு துரங்குடா, கண்ணு. மூனியம் மாளைத் துணைக்கு வந்து படுத்துக்கச் சொல்றேன்...நாங்க ளெல்லாம் பத்து மணிக்கு வந்துடுவோம்..." இவன் வாயைத் திறந்து, ஒரு வார்த்தை பேசவில்லை. கட்டிலில் போய்க் குப்புறப் படுத்துக்கொண்டான். அவ னுக்குப் பயங்கரமான ஆத்திரமும் அசூயையும் உண்டாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/29&oldid=1403453" இலிருந்து மீள்விக்கப்பட்டது