பக்கம்:நேசம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேசம் தொடையில் புல்லாங்குழலைத் தட்டியபடி, பையன், உள்ளே நுழைந்தான். அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அம்மா தையல் மெஷினை ஆட்டிக்கொண்டிருந்தாள். "கொடக் கொடக் தாத்தா, ஜன்னலுக்கு வெளியே, செடியில், பெருமை பாக ஆடிக்கொண்டிருந்த ஒற்றைச் செம்பருத்திப் பூவைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். நான் இன்னிக்கு ஒரு பாம்பு பார்த்தேனே!' மையன் பொதுவாகக் கூடத்தில் தாயம் உருட்டிவிட்டான். ஆனால் யாரும் எடுக்கவில்லை. 'நான் இன்னிக்கு ஒரு பாம்பு பார்த்தேனே!' என்றான் மறுபடியும். மாலை மஞ்சள் வெயில், அவன் தலையைத் தங்க ப்ரபையாக்கிற்று. குரலில் இளநீர் விதிர்வீதிர்த்தது. பேச்சிலேயே ஒரு மழலைக் கொழகொழப்பு. § { ஆ!’ என்றார் அப்பா. அவர் கைகளிடையே, பொறுமையிழந்து, பேப்பர் மொடமொடத்தது. இந்த ஃபாக்லண்ட்ஸ் விவகாரம்-பசங்க சண்டை போடறான் களா? கோலாட்டம் போடறான்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/49&oldid=799042" இலிருந்து மீள்விக்கப்பட்டது