பக்கம்:நேசம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44லா. ச. ராமாமிர்தம்


தாத்தா அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். "தாத்தா, நான் ஒரு பாம்பு பாத்தேனே' ஒடத்தின் உள்வளைவு போல் குரல் தோய்ந்து மேல் ஏறிற்று. அம்மா, அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்தாள். *' என்னடா சொல்றே, பாம்பா? ஐயோ, கடிச்சுடுத்தா? சொல்லேண் டா!' 'அடாடா, என்ன நடிப்பு என்ன நடிப்பு! சந்திரமதி தோத்தாள் போ!' பேப்பர் பின்னிருந்து. 'உங்களுக்கென்ன இந்த சுடுகாட்டில் வெச்சுட்டு: ஆபீசுக்குப் போயிடறேள்! அடிச்சுப் போட்டால் கூட கேட்க ஆள் கிடையாது! கரையான், தவளை, நண்டு, தேள்பாம்பு ஒண்ணுதான் குறைச்சலா இருந்தது. ஆரம்பிச்சாச்சா?' 'நான் சொல்றேன், பேசாமே இங்கேயே ஒரு மரத்தடி யில் என்னை உசிரோடே பொசுக்கிடுங்கோ, குரல் பலப்பம்போல் கிறிச்சிட்டுக்கொண்டே போய் உச்சத்தில் "பட்டென்று உடைந்தது. ஹிஸ்டீரியா கேஸ். பேச்சைக் கொடுத்தால் மாட்டிண் டேன். பேப்பர் தன்னை இன்னும் உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டது. தெரிஞ்சு பேசறாளா? தெரியாமல் பேசறாளா? விட்டிக்குள்ளே ஒரு ரூமும் தாழ்வாரமும், அதனுள்ளேவே இதர வாணவேடிக்கை-300 ரூபாய் கேக்கறான். தவிர அட்வான்ஸ் மூணு கழியிலே மூணு எங்கே போறது? அதுக்கே ஊசிகுத்த இடமில்லை. இவா நாய்ச்சண்டைக்கு சாட்சி வைக்கத்தான் ஊரிலிருந்து என்னை வரவழைச்சானா? ஒரு பிள்ளைன்னா சொன்னபடி ஆடியாகனுமா? நம் மரியாதையை நாம் காப்பாத்திக்கணும்னா, நாம் தூரத்துப் பச்சையா இருந்து டனும். வளரும் பச்சைச்கு நல்ல சூழ்நிலையப்பா இது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/50&oldid=1403481" இலிருந்து மீள்விக்கப்பட்டது