உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேசம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறந்த பால்57


'நீங்கள் சொல்றது எனக்குப் புரியறது. ஆனால் என்னைப்பற்றி நீங்கள் அப்படி நினைக்கக்கூடாதுன்னு நான் கேட்டுக்கத்தான் முடியும். நம் குடும்பங்கள் அப்படியா இருந்தோம்? உங்களைப் பார்த்தேன் என்று இன்றுபோய் வீட்டில் சொன்னால் அவள் அப்படி சந்தோஷப்படுவாள். ஏன் விலாசம் விசாரிக்கலேன்னு கோவிப்பாள். மங்களம் எம்ஐடியிருக்காள்?’’ சாமி எளுந்திருங்க.’’ -நாலு மீனவர்கள்-திடும் என-நாங்கள் நகரும் வரை கூடக் காத்திருக்கமாட்டார்கள் போல இருக்க...அப்போது தான் மீண்டுகொண்டிருக்கும் ஒரு அலைமேல் நாலுபேரும் கடகை வாகாய்த் தள்ளி, அலைபாய்ந்து, அலைதாண்டி, ஏறி உட்கார்ந்துகொண்டு நிமிஷமா தூரமாப் போயும் விட்டான்கள். ராப்பூரா மீன் பிடிப்பார்கள். விடியற்காலை யிலோ அல்லது எப்போது மீள்கிறார்களோ-மீண்டால்தான் மீட்சி, என்னை அறியாமலே என் பிள்ளைமேல் என் பார்வை சென்றது. இன்னும் ஒரு வாரமோ, பத்து நாளோ குவாயிட் போக இருக்கிறான். இங்கே வேலை வாய்ப்பு இல்லை. குறைந்தது அஞ்சு வருட ஒப்பந்தத்தில் போனால், திரும்பி வரும்போது வயது 33 ஆகிவிடும். எப்படி வருவானோ? அஞ்சு வருடங்களில் என்ன வேண்டுமானாலும் நேரலாம். சிறகு முளைத்தவுடனேயே கூட்டைப் பிரிக்கும் பட்சி வாழ்க் gos;stor. But such is life. "மங்களம் எப்படியிருக்கிறாள்?’ தடைபட்டுப்போன கேள்வியை மீண்டும் கேட்டேன். 'அம்மா செத்துப்போயிட்டா பத்து வருஷமாச்சு.” அவள் முகத்தில் குங்குமம் கொதித்தது. அவர் விழிகள் துளும்பின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/63&oldid=1403493" இலிருந்து மீள்விக்கப்பட்டது