உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நேசம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62லா. ச. ராமாமிர்தம்


'திடீரென்று வீட்டில் பாலும் தயிரும் கொஞ்சம் கூடப் பெருக ஆரம்பித்தது. பால் கணக்கு ஏறாமலே தரம் திடீரென்று திடமாயிற்று. காப்பி, தனி மணம் வீசிக்கொண்டு ’ஏ ஒன். என் காப்பிப் பைத்தியம் உங்களுக்கே தெரியும். நானே பார்த்தேன், மாட்டைக் கொணர்ந்து நேரே கறக்கா விட்டாலும், அவன் இரண்டு விரல்களால் நுரையைத் தடுத்துக்கொண்டு ஊற்றுகையில், குவளையிலிருந்து பால் சேறாய், மங்களம் ஏந்தும் ஏனத்தில் இறங்குவதை, என்ன கண்ணுப்பிள்ளே . உடம்பு கிடம்பு சரியா விருக்கையா?” அவனுக்குத் திக்கெனத் தூக்கிவாரிப் போட்டது. திறு திறுவென விழித்தான். ஏன் சாமி அப்பிடி கேக்கிறிங்க?" "உன் பால் சாதாவா நீலமாயிருக்கும், துணி அலசற மாதிரி. ஆனால் ஒரு மாதமா, "பெஸ்லா வெள்ளையா விருக்கு, தடிப்பாயிருக்கு: சிரித்தான். லேசா தீர்த்தம் போட்டிருக்கான். அந்தப் உழக்கத்துக்கு வேளையா, பொழுதா? "என்னவோன்னு பயந்துட்டேனுங்க. இப்போ வீட்டிலே மாடு ரெண்டுகூடக் கறக்குது. வீட்டுக் கன்னுக்குட்டிங் களை மாமியார் வீட்டிலே இத்தினி நாள் விட்டு வெச்சிருந் தேன். மச்சான் கலியாணத்துக்குப் போனேனில்ல, ஒட்டியாந் துட்டேன். அப்புறம், ஒரு சமயம் போலவே எப்பவும் இருக்க முடியுமா? இருக்கலாமா? அம்மாவை எங்கள் குலதெய்வமா நினைக்கிறேனுங்க. ஐயாவும், அம்மாவும், கொளந்தையும எப்பவும் நல்லா இருக்கனும், எல்லாம் நல்லபடியா நடந்தால் கொளந்தை கலியானத்துக்குச் சீதனமா பசு ஒண்ணை ஒட்டப்போறேனுங்க!” 'மங்களம், நமக்கென்ன குறைச்சல் போ!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/68&oldid=1403498" இலிருந்து மீள்விக்கப்பட்டது