பக்கம்:நேசம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70லா. ச. ராமாமிர்தம்


கிழவர் திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் நோக்கினார். நினைவின் எதிரொலிதான் என்று தெளிந்ததும் மீண்டும் அலர்ந்தார். அது அக்னி பகவானின் பழைய குரல்... "ராமா, இவள் மாசற்றவள்...' கோதண்டத்தின் மணி தானாகவே அலறிற்று. கபந்தங் கள் கூத்தாடும் அந்த யுத்த பயங்கரத்தில், உயிர்களைக் குடித்துக் குடித்து மாளாமல், காலதேவன் வயிறு திணறும் அந்த நாசகளத்தில், இன்றுபோய் நாளை வா’ என்று. சொல்லவல்ல அமைதி காக்கும் சாந்தபிரான் வலது புருவம் வியப்பில் உயர்ந்தது. கோதண்டத்துக்குப் பயமா? ஆம்! இது பயம்; வேறு பயம். அக்னி தேவன் தரும் ப்ரமாணிக்கம் அல்லவா? 'இவளுடைய கற்பின் தகிப்பு என்னால் தாளவில்லை” -ஏந்தமுடியாத தழலை எப்படியோ அவனிடம் சேர்த்து விட்டான். அவர் பார்வை, கண்ணுக்கெட்டியவரை நீலமலரைத் தொடர்ந்தது. அப்படிப்பட்டவளை, பாவம் ஓரிடம், பழி ஓரிடமாக மீண்டும் கானகம் அனுப்பியதற்குப் பிராயச்சித்த மாக, இதோ, இப்படி, அங்கப்ரதட்சணம் செய்துகொண் டிருக்கிறான். லீலா, அப்போது இழைத்த தவறுக்கு அப்போதே தண்டனை இல்லை; இழைக்கும் முன்னரே தவறும்-தீர்ப்பும் சேர்ந்து தாமே பதிவாகிவிடும் ரகசிய ஏடுகள். மேல்வரும் வரை அந்த நியதியை வகுத்த ஆண்டவனுக்கும் எட்டாமல், அவனும் தவறுக்கும்-தீர்ப்புக்கும் விலக்கு இல்லை என்ப. தால், அவனுக்கும் அப்பாற்பட்டு எந்தப் பேழிையில் பூட்டிக் கொள்கின்றன? அந்தப் பேழையும் எங்கே? இதுதான் உாரையும் ஆளும் விதி. -'அண்ணன் இல்லாத சமயத்தில் என்னைப் பெண் உாளப் பார்க்கிறாயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/76&oldid=1403505" இலிருந்து மீள்விக்கப்பட்டது