பக்கம்:நேசம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம தர்மம்71


அனுமன் செவிகளைப் பொத்திக் கொண்டார். உடல் குலுங்கிற்று. இதற்கு அனுபவிக்கத்தான், வண்ணான் வண்ணாத்தி சாக்கில், வட்டியும் முதலும்போல் பிள்ளைத்தாச்சியாக பிராட்டி மீண்டும் கானகம் கொழுந்தனைச் சீறட்டும். அலுத்துக் கொள்ளட்டும். திட்டட்டும். ஆனால் இப்படி வக்ரமாக, இவ்வளவு ஈன பாஷை எப்படி. ராஜரிஷி மகள் வாயில் வந்தது? அதுதான் விந்தை, திகைப்பு. வாயை எத்துணை முறையேனும் அலம்பல் வேண்டும். அன்றொரு நாள் மாலை வழக்கம்போல் கிஷ்கிந்தையிலிருந்து ராகவனைத் தரிசிக்க வந்திருந்தபோது, நந்தவனத்தில் அமைத்திருந்த வேனில் பந்தலின் இதமான இருளில் இருவரும் அமர்ந்து அளவளாவிக் கொண் டிருக்கையில், எட்ட நந்தவனத்தின் மற்றொரு மூலையில், தேவி தோழிகளுடன் பந்து ஆடிக்கொண்டிருக்கையில், ராகவனுக்கு அன்று மனமிருந்தநிலை. ஏதோ பேச்சுவாக்கில், 'ஆஞ்சனேயா, இவளைப்பற்றி நாம் ஏதறிவோம் உண்மையில், மண்ணிலே கிடைத்தாள் என்பதன்றி?’’ வாய்விட்டு இவ்வாறு சொல்லவில்லை. பாஷையென்பது வாய்ச்சொல்லுக்கு அடங்கியதல்ல. கண்ணோக்கு, வேறு சைண்ககளுக்கும் கட்டுப்பட்டதல்ல. பாஷையென்பது இவை களே அல்ல. வாய் தாண்டி, கண் தாண்டி, சைகை தாண்டி, மனம் தாண்டி, மூலத்தின் தியானக்கடலில், அங்கும் அதற் குரிய தொடுவானம் விளிம்பைத் தொட்ட அமைதியில், கடலிலேயே எழுந்து, கடலிலேயே விழும் துள்ளு மீன்எழுகையில் கேள்வி, விழுகையில் பதில்-பரஸ்பர நிலை, நெஞ்சோடு நெஞ்சு கிளத்தல் எனும் தாதுபாஷை இருக் கிறது; இதனினும் நுண்ணிய அடுத்த நிலை தெரியும் வரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/77&oldid=1403506" இலிருந்து மீள்விக்கப்பட்டது