பக்கம்:நேசம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84லா. ச. ராமாமிர்தம்


'ராகதேவதைக்கு முகத்தில் இடம் கொடு. ராகத்தை இடவசதியாய்ப் புழங்கவிடு. டூத் பேஸ்டாய் பிதுக்காதே." சபேசனுக்குக் குருவின் போதனை. 'சங்கதிகள் என்னவோ லக்கக் கணக்குத்தான், ஆனால் முன்னாலேயே விடைதெரிந்த கணக்கல்ல. கடைசிவரை விடை காட்டாமலே வட்டத்துள் மறைந்த கணக்காயிருத்தல் வேண்டும். வழி தப்பிப்போய், நீ முழிக்கும் கணக்காக ஆகி. விட்டது.” இதுவும் அவர்தான். உதவுபடியில் சபேசன் சாரீரம் சிம்மத்தை நினைவூட் டியது. அடிக்கார்வைகளில் உன்னதமான உணர்ச்சிகளைக் காட்டவல்லது. விரக்தியான தீரம், அற்பங்களுக்கு இரங்கா பவுருஷம், மிருக ராஜ கம்பீரம். எவ்வளவுக் கெவ்வளவு சபேசனுக்கு மந்தரம் பலமோ, அத்தனைக்கும் பஞ்சமத்தில் சாமாவின் குரல் ஈடு கொடுத்தது. இனிமைசுட மந்தரத்திலிருந்து பஞ்சமத் துக்குப் பிசிர் இல்லாமல் ஒரே மூர்ச்சத்தில் கமான் வளைத்தது. அந்தரத்தைக் கிழித்துக்கொண்டு மேலே செல் கையில், இரு பக்கங்களிலும் கற்கண்டுச் சிதர்கள், சில்கள் திரைவிரித்து, திவலைகள் உதிர்ந்தன. விளம்ப காலத்தில், அடிமேல் அடி எடுத்து வைக்கையில், சிற்பக் கதவுகளின் திறப்பில் வெள்ளி மணிகள் கிணி கிணி..ஆனால் இந்தப் பாட்டில் பிர்க்கா வித்தைகளுக்கோ, ஸ்வர சமத்காரங் களுக்கோ இடம் இல்லை. அலைகள், அலைகள். தவழும் அலைகள்: ஆடி வேர் விட்ட அலைகள். பகுள பஞ்சமி நிலாவைக் கட்டிய நகடித்திரக் கூட்டிங்களுக்கடியில் நடுக்கடலின் மூச்சு மிதப்பின் மேல் கவிழ்ந்த ஒடத்தின் அசைவுகள். தொண்டை துக்கத் தின் சிறகடிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/90&oldid=1403519" இலிருந்து மீள்விக்கப்பட்டது