பக்கம்:நேசம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா83


'ஈ ஜகமுலோ திக்கெவரம்மா?" அகரத்துக்கு அக்ஷரம் இடையில் கமகம் அலை தழைந்து இழைந்து, 'திக்கெவரம்மா’வில், தேம்பல் நாபி வேரைக் கொத்தாகப் பிடுங்கிக்கொண்டு எழும்பினதும், ஹாலில் விளக்குகள் "பொட் டென அணைந்தன. மேடையில் பின்னால் ஆள் உயரம் ராஜராஜேஸ்வரி (பூரீ ராஜராஜேஸ் வரி ஸங்கீத ஸ்பா) படத்துக்கெதிரே பஞ்சமுகக் குத்து விளக்குச் சுடர் மட்டும் இடத்துக்கு ஸந்நிதிக் களை வந்து விட்டது. 'ஈ ஜகமுலோ திக் கெவரம்மா அம்...பா (முங்கி மொண்டு எழுந்து) ஜனனி நினு வினா' குரல்கள் சிறகு விரித்த எழுச்சியில், ஜோடி சேர்ந்த்து இருவருக்குமே தெரியாது. ஒரு தனிச்சக்தி இரு குரலையும் வாங்கிக்கொண்டது. நிகழ்ந்துகொண்டிருக்கும் ரஸாயனம், வேளையின் திரி புக்குக் காரணம் சாமாவா? சபேசனா? சபையோரின் பாத்திர நிலையா? அதோ குத்துவிளக்கு தரும் பெரு நிழல் சிறு ஒளியில். படத்தினின்று தனி ஒளிவீசும் அந்தப் புன்ன கைக்குள்தான் ரகஸ்யம் ஒளிந்துகொண்டிருக்கிறது. இந்த வேளையின் ஜாதுவும் ஜவ்வாதும் அவளுடையதுதானே! பக்கவாத்தியங்களைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அடியைத் தள்ளியெடுத்ததால், தள்ளிப்போன தாளத்தில் ஏமாந்து ஒருகணத் திக்ப்ரமையில் செயல் மறந்து போனார்கள். என்றுமே இருவரும் ஓங்கித் தொ.ை தட்டியோ, கையோடு கை அறைந்தோ அட்டகாசம் பண்ணுவதில்லை. அங்க சேஷ்டையை அறவே விலக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/89&oldid=1403517" இலிருந்து மீள்விக்கப்பட்டது