பக்கம்:நேசம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82லா. ச. ராமாமிர்தம்


霹2 லா. ச. ராமாமிர்தம் இருக்கட்டுமே!’ என்று ஆசைப்படலாம். அவனா பாடு கிறான்? சாய்கால் பலம் பாட வைக்கிறது. சல்பேட்டா' இப்போ புகாத இடம் எது? ஆகையால் இசை திசை மாறக் கேட்பானேன்? ‘நமக்கு என்ன எவன் எப்படியானும் போகட்டும்’ என்று. கட்டின பசுவாகயிருந்தால், திரும்பத் திரும்ப இவனையே தான் கழுத்தில் கட்டிக்கொண்டிருப்பார்கள். இப்பவே கழற்றிக்கொள்ள வழி தேடாவிடில் இந்தக் காம்பினேஷ னுக்குக் காறை பூசியாகிவிடும். இந்தத் துறையில் பகை ஆகாது. ஒருத்தர் விரோதம் நமக்கு என்ன? நாசூக்காகச் செய்யவேண்டிய வேலை; வேலைப்பாடு. மதுரை மணி ஐயர் ஒரு சமயம் வாத்தியத்தின் துடுக்கு அடங்கினதைப் பார்த்தது நினைப்புக்கு வந்தது. என்ன நேர்ந்தது, எப்படி எந்த லகுவில், எந்த இடத்தில் என்ன பொடி, யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாது. நடு வாசிப்பில், மிருதங்கக்காரன், சரணாகதியில் இரு கரங் களையும் தூக்கிச் கூப்பினதுதான் தெரியும். அப்பா அந்தக் சமயத்தில் அந்த முகத்தில் தோன்றிய இளஞ்சிரிப்பின் கருணை: அடேப்பா!-இனம் கண்டுகொள்ளச் சேய்வதில் தான் இருக்கிறது; சந்தியில் மொக்கு மோறையை உடைப் பதில் என்ன இருக்கிறது? அதுபோல... இன்று மைலம் வாசுதேவப் பிள்ளையை, பதினெட்டாம் புள்ளியில் புலியைக் கட்டுவதுபோல் ஸ்வர வலையில் மாட்டி விட்டு.கொஞ்சநேரம் நெளிவட்டும், புத்தி வரும் வரை. இன்றைய ஷண்முகப்பிரியாவின் "ப்ளான் இதுதான். அந்தக் குறியில்தான் போய்க்கொண்டிருக்கையில், சர்மா, "ஜனனி நினுவினாவை எடுத்ததும், சபேசன் வியப்புடன் அாமாவை நோக்கினான். சாமா முகம் குனிந்திருந்தது. அதுவும் எடுக்கிற இடத்தைப் பார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/88&oldid=1403516" இலிருந்து மீள்விக்கப்பட்டது