பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இப்படிக் கேள்விமேல் கேள்வி போட ஆரம்பித்து விட்டார்கள் நேருவைப் பேட்டி கண்ட குழந்தைகள். நேரு சிரித்துக்கொண்டே அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித் தார். அவருடைய பதில்களைக் கேட்டுக் குழந்தை கள் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள். 1957-ம் ஆண்டு, நேருவின் பிறந்த நாளில் நேருவின் மாளிகையில்தான் இந்தப் பேட்டி நடந் தது. அகில இந்திய வானுெலி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவின் பல பகுதி களிலிருந்தும் குழந்தைகள் வந்து இதில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தை களில், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கி. லட்சுமி என்ற சிறுமியும் இருந்தாள். அவள் என்ன கேள்வி கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே இருந்த தந்தத்தால் செய்த யானேப் பொம்மை அவள் கண்ணில் பட்டது. உடனே அவளுக்குக் கேள்வி தோன்றிவிட்டது. "மாமா, நீங்கள் அயல் நாட்டுக்குத் தூதர்களே அனுப்புகிறீர்கள். குழந்தைகளுக்காக யானைகளை யும் அனுப்புகிறீர்கள். குழந்தைகளாகிய எங்களையும் ஏன் அனுப்பக் கூடாது? நாங்கள் அந்த நாட்டுக் குழந்தைகளைச் சந்தித்து அவர்களிடம் நம்மைப் பற்றி கூறலாம்; அவர்களைப் பற்றியும் நாங்கள் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?” என்று கேட்டாள். - - நேருவுக்கு லட்சுமியின் கேள்வி மிகவும் பிடித் திருந்தது. "நல்ல யோசனை, நிச்சயம் கவனிக்கி றேன்” என்று பதில் கூறினர். - அப்போது அந்தக் குழந்தைகளிடம், "நீங்கள்