பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர்களாயிருக்கும்போது நேரத்தை வீணுக் கவே கூடாது. நான் மாஸ்கோ போயிருந்தபோது சுவரில் தீட்டப்பட்டிருந்த ஒர் ஒவியத்தைக் கண் டேன். அதில் லெனினும் சில மாணவர்களும் இரு தார்கள். மாணவர்களைப் பார்த்து லெனின் சொன்ன புத்திமதி அதிலே எழுதப்பட்டிருந்தது. லெனின் சொன்னது என்ன தெரியுமா? - மாணவர்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் 交 நன்ருகப் படிக்க வேண்டும் இரண்டாவது காரியம் நன்ருகப் படிக்க வேண்டும் மூன்ருவது காரியமும் நன்ருகப் படிக்க வேண்டும். இதிலிருந்து மாணவர்கள் செய்ய வேண்டி யது என்ன என்பது தெரிகிறதல்லவா?” என்று நேரு கேட்டார். குடைபோலப் பூச்செண்டு! 1952-ல் நேரு சென்னைக்கு வந்திருந்தபோது சுமார் அரை லட்சம் குழந்தைகள் அணிவகுத்து நின்று அவரை வரவேற்ருர்கள். வானம் அதி, வாழ்த்துக் கூறினர்கள். நேரு காரில் நின்றபடியே ஸ்டேடியத்திற்குள் சுற்றி வந்தார். அங்கு நின்ற குழந்தைகளைச் கண்டு அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தார் அவர்களது மலர்ந்த முகங்கள் அவரது மனத்தைச் கவர்ந்தன. நேரு மேடையில் ஏறியதும், இரண்டு தலைமை ஆசிரியர்கள், மிகப் பெரிய மலர்மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு மேடைக்குச் சென்ருர்கள். நேருவின் கழுத்தில் அந்த மாலையைப் போட்டதும், குழந்தைகள் கை