பக்கம்:நேருவும் குழந்தைகளும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்போடு தடவிக் கொடுத்து ஆசி கூறிஞர் நேரு மாமாவின் தந்தை, பண்டித மோதிலால் நேருவின் நூற்ருண்டு விழாக் கொண்டாட்டத்தில் நாடகங்கள் கடிக்க வேண்டுமென்று என் அப்பாவுக்கு அழைப்பு வந்தி سی அப்பா தி. க. ஷண்முகம், சிற்றப்பா திரு. பகவதி, டி. கே. எஸ். நாடகக் குழுவினர் எல்லோருமாகப் புதுடில்லிக்குப் புறப்பட்டார்கள். நம் இந்தியாவின் தலே நகரான டில்லியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எங்களுக்கு மட்டும் இருக்காதா, என்ன ? நானும் என் உடன் பிறந்த அண்ணன்மார்கள் கலேவாணன், புகழேந்தி, சிற்றப்பா பிள் ஆளகள் குமார், மணிவண்ணன் எல்லோருமாகச் சேர்ந்து பிடிவாதம் செய்தோம். பள்ளிக்கூட விடுமுறையல்லவா ? மதுக்க முடியாமல் எங்களேயும் புது டில்லிக்குக் கூட்டிச் சென்ருச்கள். ஒரு கான் நேரு மாமா இராஜராஜ சோழன்’ நாடகத்திற்கு வந்தார். மேடை யிலும் ஏறி என் அப்பாமார்களுக்கும் காடகக் குழுவுக்கும் ஆசி கூறினர். நாங்கள் கேரு மாமா பக்கத்தில் கிற்க பாக்கியம் செய்யவில்லேயே என்று ஏங்கினுேம். நாடகம் முடிந்த மறுகாள் 1951 மே மாதம் 5-ஆம் தேதி குழுவினர் எல்லோரும் கேரு மாமாவின் மாளிகைக்குப் போவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதை அறிந்ததும் எங்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லே. நேரு மாமாவை வேரில் பார்த்து என் வணக்கத்தைச் சொல்ல வேண்டுமென்று துடித்துக்கொண்டிருந்தேன். காலை 10 மணி சுமாருக்கு எல்லோரும் நேரு மாமாவின் மாளிகைக்குச் சென் ருேம். மாளிதையில் எங்கு பார்த்தாலும் அழகியசிற்பங்களும்படங்களுமாக இருந்தன. நேரு மாமாவின் கலேயுள்ளத்தை அவருடைய மாளிகையே எடுத்துக்இாட்டியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் கேரு மாமா எங்கள் பக்கத்தில வரப்போகிருர் என்று எல்லோரும் சொன்னர்கள். கான் மட்டும் கின் கொண்டே இருந்தேன். நேரு மாமா வந்தார். எல்லோரும் அமைதியாகக் கைகூப்பிக்கும்பிட்டார்கள். நேரு மாமா அருகில் வந்ததும் கான் தைரியமாக முன்னல் போய் கின்று நமஸ்தே, நேரு மாமா " என்று கூறினேன். உடனே அ என் இரு கன்னங்களேயும் அன்போடு தடவிக்கொடுத்து ஆசி.கூறினர். அந்தச் சில விடிைகளில் எனக்கேற்பட்ட உணர்ச்சியை வார்த்தைகளால் எப்படிச்சொல்ல முடியும் அந்த மகத்தான நிகழ்ச்சி அப்படியே என் - கத் கெஞ்சில் பசுமையாக இருக்கிற, வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். -அருள்மொழி, சென்னை-14.