பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.இங்கிலாந்தில் கல்வி

ஆற யிரம்மைல் தூரத்தில்
ஆங்கில மாணவர் தம்முடனே,
நேராய்ப் பழகிப் படித்திடவே
நேருவை அனுப்பிட வேண்டுமென.

தந்தை திட்டம் போட்டனரே.
தக்கதோர் நாளும் குறித்தனரே!
அந்தச் சமயம் ஜவஹருக்கே
ஆனது வயது பதினேந்தே!

அப்பா, அம்மா தங்கையுடன்
அருமை நேரு புறப்பட்டுக்
கப்பல் ஏறிச் சென்றனரே
களிப்புடன் லண்டன் சேர்ந்தனரே.

37