பக்கம்:பகுத்தறிவு (1956).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28–12–56

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்பதறிவு.

. -திருவள்ளுவ:

oಖt 6| 356ುಹಿ 28-2-56-l@g 25

சேலத்திலே பொதுக்குழு.

  1. 8 * :

தீராத இடும்பை பெற்று தேயும் தென்னகத் தின் தனிப்பெரும் விடுதலே இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் த ன து செயற்குழுவையும், பொதுக்குழுவையும் 29, 30.12-56 நாட்களில்

சேலத்திலே கூட்டுகின்றது.

திருச்சி மாநில மாநாட்டிற்குப் பிறகு தி. மு. க. என்ற மூன்றெழுத்துக்கள் தமிழகத்திலே முக்கியத் துவம் பெற்றுவிட்டன. பட்டிதொட்டிகளிலேயும் பாங்காகப் பரவி, நாட்டுப்பற்று மொழிப்பற்று மிக்க நல்லவர்களின் இல்லங்கள்தோறும்,இளைய பரம்பரை யின் உள்ளங்கள் தோறும் புத்துணர்ச்சியைக் கிளப் பிவிட்டிருக்கின்றது. "நாமிருக்கும் நாடு நமதே; இங்கு கல்வாழ்வுபெற வேண்டியவ்ர் நாமே" என்ற திராவிடத் தேசீய உணர்ச்சி எதிர்பாராத இடங் களிலும் முளைவிடத் தொடங்கிவிட்டன. கழகத்தின் கிளர்ச்சிகளிலே போராட்டங்களிலே நாம் செய்த தியாகம்,சிந்திய இரத்தம்வீண்போகவில்லை. தி.மு.க தேர்தலில் ஈடுபடுவது, பொங்கிவரும் விடுதலை வேட்கையின வலுப்பெறச் செய்து, மங்கிவிரும் திராவிடத்தில் மானவிளக்கேற்றி, பாழ்பட்ட இதய்ங் களிலே பகுத்தறிவு ஒளிகாட்டி, அடிமைவிலங்கறுக் கும் அரியபணிகளிலே ஒன்று. இஃது எளிய காரிய முமன்று. எங்கெங்கிருந்தோ எப்படி எப்படியோ எதிர்ப்புகள் தோன்றிடும்; எவரெவரோ பகையா வர். நமது இலட்சியப் பங்காளிகளே நமது காலை வாரிவிடக் கச்சைகட்டுகின்றனர்:கண்களை உருட்டு கின்றனர்; கடிந்து பேசுகின்றனர்: "அகில இந்திய ரீதி"களைப் பற்றியோ பேசவே வேண்டாம்; சந்தர்ப்ப வாதிகள்! பாரதப் புதல்வர்கள்!

பொதுத் தேர்தல் நெருங்கிவிட்டது; செய்ய வேண்டிய க்ாரியங்க்ளோ ஏரிாளமாக இருக்கின்றன.

பொறுப்புகளும், கடமைகளும் தலமைப் பீடத்தை நெருக்குகின்றன. இந்த நேரத்தில் சேலத்தில் கூடு

கின்றன: செயற்குழுவும் பொதுக்குழுவும்.

உழைப்பினை மட்டுமல்ல, கண்ணியம், கட்டுப் பாடுகளை கழகத் தோழர்கள் புறக்கணிக்க மாட்டார் கள். தேர்தல் நேரத்திலே அவை மிக மிகத் தேவை

யென்பதையும் நன்கறிவர், நம் தோழர்கள்.

கழகப் பணியாற்ற வரும் தலைவர்களே, சேலம் மாவட்டத்தின் சார்பிலே சிரம்தாழ்த்தி வரவேற்கி ருேம். வருக! வருக! நடைமுறைக்கு ஏற்ற முடிபுகள், திட்டங்கள்தருக!ஏற்றுப் பணிபுரியுச்சித்தமாயிருக்கி றது திராவிடம்!செயல்படக் காத்திருக்கிறது சேலம்! - ப. கண்ணன்,

ந த சுர மே ைத.

தென்னகத்தின் குழற் கலைஞன் நாயனப் பெரு வேந்தன் திருவாவடுதுறை டி.என். இராசரத்தினம் 12-12,56-ல், இயற்கை முடிவினை எய்திவிட்டார்: தமிழகம் ஈடுஇணையற்ற கலைவேந்தன இழந்து விட் டது: தேம்பியழுகின்றது கலேயுலகம்!

இராசரத்தினம் இசையுலக ரத்தினம் மட்டு மல்ல; முப்பதாண்டுகளுக்கு முன்னரே, பெண்களே கடவுளுக்குப் பொட்டுக்கட்டிவிடும் வழக்கத்தை எதிர்த்துப் போராடிய விரர், பென்னம் பெரிய திரு விழாக்களில், நாதக்குரல் எழுப்பி நற்றேன் மழை .ெ பா ழி ந் து தெய்வபக்திக்கு ஆக்கமளித்தவர், அறிஞர் அண்ணுவின் கட்டளையேற்று நமது மாகில மாநாட்டில் நாதமுழக்கம் செய்தார்.

கலைஞர்களின் வாழ்விலே தேக்கமிடும் நச்சு நடத்தைகள் உயிர்க் கொல்லியாக மாறுவதுண்டு; பலபேர் மாண்டதுண்டு, அவர்களைத்தொடர்ந்தார் அருங் கலைச்செல்வர் மிக மிக வருந்துகிருேம். நிதியிழந்த அவரது குடும்பத்திற்கு கிதியளிக்க தோழர்கள் முன்வந்திருக்கின்றனர். சில கிறுவ முய லுகின்றனர்; வேறு என்ன கைம்மாறு செய்யப் போகிருேம்: 畿 尊

ZeeMMMMMS MMM MMMM eMeMeeMBeS eMMeeMM eMB BBM BMeSMYMMYY

- முக்கிய அறிவிப்பு.

பொங்கல் மலர் வேலை கருதி பகுத்தறிவு' அடுத்த இருவார இதழ்கள் நிறுத்தப்பட்டுள் ளன என்பதை கையொப்பதாரர்க்கும், விற் பனையாளர்க்கும் தெரிவிக்குக் கொள்கிருேம்.

டிசம்பர். பட்டியல் பாக்கியுள்ளவர்க்கும், முன்பணம் அனுப்பாதவர்க்கும் மலர்கள் அனுப்பப்படமாட்டாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பகுத்தறிவு_(1956).pdf/228&oldid=691666" இலிருந்து மீள்விக்கப்பட்டது