உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பசி கோவிந்தம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



14

பசி கோவிந்தம்

3

ஆயிரமாயிரம் வருடங்களாக, எல்லாம் அகித் தியம், எல்லாம் அகித்தியம்’ என்று தாங்களும் அகித் தியம் என்பதை உணராமல் அடியான்களும் ஆசான் களும் அலறி வந்தும், வாழ்க்கையில் பிடிப்பும் உலகத்தில் பற்றும் இன்றுவரை நிலைத்து கிற் பதற்குக் காரணம் பெண். எனவே, முதலில் படிப்புக் கும் இரண்டாவதாகப் பணத்துக்கும் வேட்டு வைத்த ஆசான், மூன்ருவதாகப் பெண்ணுக்கு வேட்டு வைக்கிருர்:

தொட்டால் துயர் தொட்டால் துயர்

தொட்டால் துயர், பெண்ணை!

சிட்டாய்ப் பற சிட்டாய்ப் பற

சிட்டாய்ப் பற, பயலே!

எட்டா இன்பம், கிட்டா இன்பம்

எதுவோ அது இன்பம்!

எட்டும் இன்பம், கிட்டும் இன்பம்

எதுவோ அது துன்பம்!

ஆம், தாகத்துக்குக் தண்ணிர் தேடுவது துன்பம்; தேடாமலிருப்பது இன்பம் - இதென்ன வேடிக்கை!” என்கிறீர்களா?-இதுதான் தத்துவமடா, தத்துவம்!

சொல்வதைக் கேள்- தொடாதே, பெண்ணே! தொட்டால் இன்பம் எது?’ என்பதை நீ உடனே கண்டுகொண்டு விடுவாய்; இதுவே எட்டும் இன்பம் இதுவே கிட்டும் இன்பம்’ என்று நாங்கள் காட்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/16&oldid=1628049" இலிருந்து மீள்விக்கப்பட்டது