பக்கம்:பசி கோவிந்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 19

6

பேதாய், திகைக்காதே! - பெண்ணேத்தானே பேதாய் என்று அழைப்பார்கள், ஆணை அப்படி அழைக்க மாட்டார்களே?’ என்று திகைக்காதே! - ஆசானுக்கு ஆணும் ஒன்றே: பெண் ணும் ஒன்றே. உலகம் இருளில் மறையும்வரை மட்டுமே அவர் பிரம் மச்சாரிய விரதத்தைக் கடைப்பிடிப்பவராதலால் பெண் என்றும் ஆண் என்றும் பேதம் பாராட்டுவதில்லை - கேள் பேதாய், கேள்:

மனைவியர் அன்பெல்லாம்

மாயை, நம்பாதே! மடாதி பதிதொந்தி வாட விடாதே! வினையென்றும் விதியென்றும்

நம்புடா நம்பு! வீணர்கள் வாழ்வதே

தெம்புடா, தெம்பு!

அதோ, உன் மனைவி இருக்கிருளே - அவள் உன் பால் காட்டும் அன்பு மெய்யா? அவள் பொருளுள்ள பொருளா? அவளும் நீயும் ஈருடல் ஒருயிரா, ஒருடல் ஈருயிரா? - அட பேதாய், அவள் உன்னைக் கட்டி யனைத்தால் என்ன, கன்னங்கனிய உள்ளங்குளிர முத்தங் கொடுத்தால்தான் என்ன? - நீ மரணம் அடைந்துவிட்டாய் என்று தெரிந்ததும் ஓடி விடு வாளே! - அவளே கம்பலாமா? நம்பி மோசம் போக gu Tlpm?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/21&oldid=590885" இலிருந்து மீள்விக்கப்பட்டது