பக்கம்:பசி கோவிந்தம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 51

ஏ அஞ்ஞானிகளே! கேட்டீர்களா, மெய்ஞ்ஞானி களின் லட்சணங்களே?-எவரும் எளிதில் அடைய முடியாத இந்தப் பேரின் பங்கள்’ எதனுல் அவர் களுக்குச் சித்தித்தன?-படித்தால் கர்வம் வந்து விடுமே!’ என்று தற்குறியாகத் திரிந்து, பெற்ருேரை கேசித்தால் பற்று வந்து பற்றிக்கொண்டு விடுமே!’ என்று அைைதயாக அலைந்து, உரிய வயதில் உழைத்துப் பொருளிட்டினுல் உயிராசை வளர்ந்து கம்மை உயர்ந்தோனுக்கி விடுமே!’ என்று ஊர் ஊராய்ச் சுற்றி, காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் கண், காது, மூக்கு, வாய் ஆகிய கான்கு மூர்க்கரோடு ஐந்தாவது மூர்க்கரான ‘அவரையும் ஒருவாறு அடக்கி அதன் பயனுக ஒழுக்கம் பிழைத்துவிடுமே!’ என்று எவ8ளப் பார்த்தாலும் இளித்து, கணவன் மறைந்த பின் கடவுளைத் தேடி வரும் காசுள்ள கைம்பெண்களுக்கு மோட்ச லோகம் காட்ட முயன்று, கோயிலில் கடவுளைக் காணுவிட்டாலும் குப்பையில் எச்சிற் சோற்றையாவது காணலாம்’ என்று கண்டதை எடுத்து உண்டு களித்து, சமூகத்துக்குத் தொல்லை யாக, தேசத்துக்குச் சாபக்கேடாக, உலகத்துக்கு உதவாக்கரையாக உழன்று கெளிந்து புழுத்து மறைந்ததாலல்லவா அவர்கள் ஞானியார்ைகள்?அவர்கள் அடைந்த பேற்றை நீயும் அடைய வேண்டாமா? அவர்கள் அடைந்த ஞானத்தை நீயும் அடைய வேண்டாமா? அவர்களைப் போலவே நீயும் பேறு பெற வேண்டாமா? அவர்களைப் போலவே

நீயும் ஞானியாக வேண்டாமா?-படி; மாணிக்க வாசகர் அச்சோப்பதிகத்தில் வியந்து மகிழ்ந்து பாடி யுள்ள பாடல்களைப் படி,-ஞானம் முற்றி ஆடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/53&oldid=590917" இலிருந்து மீள்விக்கப்பட்டது