பக்கம்:பசி கோவிந்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பசி கோவிந்தம்

உனக்கு நீதி வழங்காத அரசியலை எப்படியாவது கைப்பற்றிச் சமநீதி சமுதாயத்தை அமைக்க ஏன் துடிக்கிருய்? - அவன் கன்ருயிருந்தால் அது அவன் செய்த புண்ணியம்; நீ கன் ருயில்லாமல் இருந்தால் அது நீ செய்த பாவம்!-இது கம் தர்மமன்ருே? இந்தத் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் கமக்கு உலகிலுள்ள உயிர்களெல்லாம் கோவிந்தனின் கோயில்கள் அன்ருே? தம்பியான உன் உயிரும் அண்ணனை அவன் உயிரும் ஒன்றேயன்ருே? - அப்படி யிருக்கும் போது,

கோபம் வேண்டாம் அண்ணே,

போட்டநாமம் ஒண்ணே! தம்பி போட்ட நாமம்

அண்ணன் நெற்றிக்காசிசு! அண்ணன் போட்ட நாமம்

தம்பி நெற்றிக்காச்சு! கணக்குத் தீர்ந்து போச்சு.

- காரியமும் ஆச்சு!

என்று எங்கள் ஆசான் பாட்டுக்கு நீ எதிர்ப் பாட்டுப் பாடலாமா? பதிலுக்குப் பதில் காமத்தைப் போடலாமா? -ஒஹோ, அண்ணன் தம்பியா யிருந்தாலும் வாயும் வயிறும் வேருே? - மறந்து விட்டேன்; மறந்தே விட்டேன் - அதனுல்தான் பரஸ்பரம் காமத்தைப் போட்டுக் கணக்கைத் தீர்த்துக்கொண்டு விட்டீர் களோ?-சரிதான், சரிதான்! - சாஸ்திரத்துக்கு இது விரோதமாயிருந்தாலும் சமூக தர்மத்துக்குச் சரிதான், சரிதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/56&oldid=590920" இலிருந்து மீள்விக்கப்பட்டது