பக்கம்:பச்சைக்கனவு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் O 101

நடக்கட்டும்...நடக்கட்டும். எல்லாம் நடக்கிற வரையில் தானே? நானும் ஒரு நாள் ஒஞ்சு நடு ரேழியில் காலை நீட்டிட்டேன்னா, அப்போ நீங்கள் செஞ்சுதானே ஆகணும்? நீங்கள் செஞ்சத்தை நான் ஏத்துண்டுதானே ஆகணும்? மடியோ, விழுப்போ, ஆசாரமோ , அநாசாரமோ-'

அம்மா அவர் காரியத்தைப்பற்றிச் சொல்லிக்கட்டும். எல்லாமே அவரே செஞ்சுண்டாத்தான் அவருக்குப் பாந்தமாயிருக்கிறது. எங்களைப் பெற்றவர்களும் ஏதோ தங்களுக்குத் தெரிஞ்சதை எங்களுக்குச் சொல்லிதான் வைத்திருக்கிறார்கள். எங்களுக்குத் .ெ த ரி ஞ் ச தை , எங்களால் முடிஞ்சவரை நன்றாய்த்தான் செய்வோம். ஆனால் அவர் ஆசாரத்தைப்பற்றிப் பெருமைபட்டுக் கொள்வதில் கடுகளவு நியாயம்கூட கிடையாது. ஜலம் குடிக்கும்போது ஒரு வேளையாவது பல்லில் டம்ளர் இடிக்காத நாள் கிடையாது; இதை யாராவது சொன் னால்- இதற்கென்று கொஞ்சம் தைரியமாய் மூத்த ஒரகத்திதான் கேட்கமுடியும்- ஒப்புக்கொள்ள மாட்டார். 'எனக்குக் காது கேட்கல்லையே!' என்று விடுவார். இதென்ன காதுக்குக் கேட்காவிட்டால் பல்லுக்குத் தெரியாதா என்ன?

உங்கள் தங்கை எங்கேயாவது திரிந்துவிட்டு, ரேழியில் செருப்பை உதறிவிட்டு, காலைக்கூட அலம்பாமல் நேரே அடுப்பங்கரையில் வந்து 'என்னம்மா பண்ணியிருக்கே?' என்று வாணலியிலிருந்து ஒற்றை விரலால் வழித்துப் போட்டுக் கொண்டு போவாள். அதற்கு கேள்விமுறை கிடையாது. அதுக்கென்ன செய்வது? நான் அப்படி யிருந்தால், என் தாயும் என்னிடம் அப்படித்தான் இருந் திருப்பாளோ என்னவோ? ஆனால் அம்மா ஏதோ, தன் வார்த்தை செல்றதுன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இவ்வளவு பெரிய சம்சாரத்தில் இத்தனை சிறிசுகள், பெரிசுகள், விதவிதங்களினிடை உழல்கையில், எந்த சீலத்தை உண்மையா கொண்டாட முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/110&oldid=590768" இலிருந்து மீள்விக்கப்பட்டது