பக்கம்:பச்சைக்கனவு.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 C லா. ச. ராமாமிருதம்

மறுபடியும் நேற்று இரவு, மறுமுறையும் ஒரு மாறுதலு மின்றித் தோன்றியது வியப்பாயிருந்தது.

எப்படியிருக்கிறாய்?"

இன்று காலை காப்பியுடன் தம்பி வந்திருந்தான், ஹாட்டையும், சூட்டையும், பூட்டையும் மாட்டிக்கொண்டு முகத்தை முழி நீளம் தொங்கப் போட்டுக் கொண்டு.

"ஆமாம், வருஷப் பிறப்பாய் இருந்தால் என்ன, வீட்டில் இறப்பாய் இருந்தால் அவனுக்கென்ன கடன்காரன், நான் மாத்திரம் வரணும் என்று உத்தரவு போட்டுவிட்டான். இந்த வயிற்றுப்பாடு, அண்டிப் பிழைப்பதென்று ஏற்பட்டு விட்டால் என்னதான் அதிகாரம் என்று எல்லையே கிடையாது. வெள்ளைக் காரன் கொள்ளை நல்லவன்: கோவிலில் சூடம் ஏற்றிச் சொல்வேன். நம்மவன் கொடுமைதான் தாங்க முடிய வில்லை. விடுமுறை நாளானாலும் அன்றைக்கு ஒரு மணி நேரமாவது வரப்பண்ணி விடுமுறை உணர்வையே கெடுத்தால்தான் அவனுக்குத் திருப்தி. இதெல்லாம் பார்த்தால் தோணறது, முனு மாஸ்ம் படுத்தபடுக்கை யாய்க் கிடந்தாலே தேவலை. நோய் இருந்தாலும் ஒய்வு இருக்குமல்லவா?” .

வாஸ்தவந்தான், ஒரு நாளா ரெண்டு நாளா? கடந்த ஒன்றரை வருஷங்களாய் நான் படுத்ததிலிருந்து சுமை முழுதும் அவன் தலையில்தான். என்னோடு போகவில்லை. என் பெண்டாட்டி இருக்கிறாள்.

அவளை சும்மா சொல்லத்தகாது. அண்ணா, மன்னி மேல் அலாதி வாஞ்சைதான். அம்பிக்குக் கையில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை. அதற்கு வயிற்றில் கட்டி. மூன்று மாதங்களாய் அவன் மனைவி ஸ்னானம் பண்ணவில்லை; தவிர தாயாச்சு குட்டித் தங்கையாச்சு. என் மனைவியாச்சு. நான், என் ஆஸ்பத்திரி, மருந்து, செலவாச்சு. அத்தனையும் தம்பி தருமம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/125&oldid=590783" இலிருந்து மீள்விக்கப்பட்டது