பக்கம்:பச்சைக்கனவு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் C 129

கொளந்தையைத் துணியிலே வாசல்லே நீட்டிட்டு அந்தப் பொம்புள்ளே அதன் பக்கத்திலே சுருண்டு விழுந்து கிடந்தா அவளண்டை அவன் மார்மேலே கையை ஒடுக்கி நின்னுகிட்டு இருந்தான். அவன் அளுவல்லே. கண் ரப்பை யெல்லாம் கள் குடிச்சவன் மாதிரி ஜெவஜெவன்னு இருந்தது. பேட்டையிலே ரெண்டு மூணுபேர், மனசு இறங்கி வீட்டுங்கிட்டப் போனாங்க. சின்னச் சாவோ பெரிய சாவோ மனுஷன் ஒண்டியாத் திண்டாடினால் கஸ்டமில்லியா?

'ஐயோ பாவம், புளைக்க வந்த இடத்திலே'ன்னு ஒத்தரு ஆரம்பிச்சார். ஏதாவது சொல்லியாவணுமே.

அந்த ஆள் சீறி விளுந்ததைப் பாக்கனுமே!

போதும் போதும் உங்களை யார் வரச் சொன்னது? 'நீங்களும் உங்க ஊரும்..!'

இந்த மாதிரி மனுசனோடே யார் என்ன பண்ண முடியும்? என்னமோ அவன் கொளந்தை போனது எங்க பொறுப்பு மாதிரி!

நான் ஒரு தடவை பார்த்தேன். எங்க ஊரிலே ஒரு பூனையிருந்தது. அதுக்குக் குட்டி செத்துப் போச்சு; தாய்ப் பூனை அப்படியே அதன் பக்கத்திலே குந்திட்டிருந்தது. ஒருத்தரையும் அண்ட விடல்லே. சவம் மூணு நாலு நாள் நாறிட்டு கிடந்தது,

நல்லா உச்சி வேளைக்கு செம்மட்டியை தோளிலே போட்டுக்கிட்டு, அவள் கிட்டேருந்து பிணத்தை முரட்டுத்தனமா பிடுங்கி, ஒரு கையிலே அணைச்சுக்கிட்டு, பேட்டை தாண்டிப் போனான். கொளந்தை கையும் காலும் லொடலொடன்னு ஆடிச்சு.

இந்த மாதிரி மனுசனோடே யார் என்ன பண்ண முடியும்?

1 – 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/138&oldid=590796" இலிருந்து மீள்விக்கப்பட்டது