பக்கம்:பச்சைக்கனவு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 C லா. ச. ராமாமிருதம்

அவங்க வீட்டிலே அளுகை சத்தம் அப்புறமே எப்பவுமே கேக்கலே. இருந்தாலும் ஒரோரு சமயம் குனிஞ்சு வேலையாயிருக்கிறவ, திடீர்னு நிமிந்து அவன் குளந்தையையும் செம்மட்டியையும் துளக்கிட்டுப் போன திக்கிலே பார்த்துட்டு நிப்பா. அவங்க புடிச்ச மண் மேலே, அவள் எழுப்பின மண்மேடு, அதோ புளிய மரத்தடியிலே அங்கிருந்தே தெரியும்.

ஒருசமயம் நாங்க ரண்டு மூனு பேர், இன்னும் ரண்டு கொளந்தையோடே சந்தைக்குப் போற ரோட்டோடே போனோம். அவள் எதிரே ஒரு கூடை மண்ணை தலைமேல் வெச்சுக்கிட்டு வந்தா கையிலே வேறே ஒரு சின்ன மண்கட்டி வெச்சிருந்தா. வழியெல்லாம் ஆடிக்கிட்டு பராக்குப் பாத்திட்டு வந்த பசங்க, குறுக்கே விளுந்தடிச்சு ஓடிவந்து அவ மேலே மோதிக்கிட்டாங்க, பார்த்தா பாருங்க, ஒரு பார்வை அந்த மனசிலே வெள்ளை முளி யிலே கருப்பு முளி ஒரு தடவை உருண்டு ஆடிச்சு. என்ன குமுறி வந்ததை அடக்கினாளோ, கைமண் மையா உதிர்ந்திச்சு.

ஆனா, என்னதான் வவுறு. மவனை நெனைச்சு உருகினாலும் கேக்குதா அவங்க அவங்க வேலையை அவங்க அவங்க செஞ்சுதானே ஆவனும், அதுவும் பொங்கல் கிட்டக்கிட்ட வந்துட்டுது. சாவுக்கு ஊதற சங்கைத்தான் வெள்ளி முளைக்கிற வேளைக்கி சந்தோசத் துக்கு ஊதினான்னா சந்தோசமாயிருக்காதா? பொங்கல் வந்துட்டுது கிட்ட வந்துட்டதுன்னு சங்கு ஊதுது. பொங்கப் பானை பண்ணவேணாமா?

வெள்ளைக் காயிதத்தைக் காயிதமாக்கறவங்க, உங்களுக்கெல்லாம் தொழிலாளிகளைக் கண்டாலே ஒரு இளக்காரம், அதுக்கென்ன கண்பார்த்தா கைசெய்யுதுன்னு லேசா சொல்லிடுவீங்க. இந்த மண் வேலையை எடுத்துக் குங்க. இதுலே எவ்வளவு கஸ்டம் இருக்குது தெரியுங்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/139&oldid=590797" இலிருந்து மீள்விக்கப்பட்டது