பக்கம்:பச்சைக்கனவு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி C 155

மன்னிப்புக் கோரும் தினுசில் சமாதானப்படுத்துவதே பாடாகி விட்டது.

'பொம்மனாட்டிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது என்று சொன்னாலும் நம் முதலாளிகள் கேட்க மாட்டேன் என்கிறான்கள். இவர்கள் வேலையும் செய்ய மாட்டார்கள், இவர்களை ஒன்றும் சொல்லவும் GLPL LIT H.

அப்போது அவனுக்கு அப்படித் தோன்றினாலும், அவளை அலுத்துக் கொள்ளும்படி நேரவில்லை. அவள் வேலை சுத்தம்தான். இருக்கும் வரை இடத்தைவிட்டு நகராமல், சாயங்காலம் மணி வேளைக்கு குடையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள். சில சமயங்களில் தான் சிற்றுண்டி வரவழைத்துச் சாப்பிடுகையில் எதிரே அவள் உட்கார்ந்திருப்பதால் அவளுக்கும் வரவழைக்கும் படி நேரும் அப்போதும் வேண்டாம் என்று வீண் பிகு” பண்ணிக்கொண்டதுமில்லை,

வேலை நேரம் தவிர, அவளை அங்கு, இங்கு, தெருவில். சினிமாவில் என்று வேறு எங்கேனுமோ பார்த்த நினைவு இல்லை. ஏதோ வருவாள், வேலையை அமைதியாகக் கவனிப்பாள், போவாள்; அவ்வளவுதான் அவளைப்பற்றி அவனுக்குத் தெரியும். ஆனால் ஐந்து நிமிஷமோ, பத்து நிமிஷமோ, எப்பவும் லேட்."

ஒரு நாள், பஸ் சக்கரத்தில் காற்று இறங்கிவிட்டது. டிராம் வண்டி நடுவழியில் நின்றுவிட்டது. இன்னொரு நாள், ஏதோ சின்ன எதிர்பாராத வேலை. ஒரு நாள், இத்தனையும் சேர்ந்து இருக்கும், சரி. இன்னிக்கென்ன?’ என்று சிரித்துக் கொண்டே கேட்பான்.

வேடிக்கையாய் சளைக்காமல் அவளும் ஏதாவது பதில் சொல்வாள். அம்மாதிரி சமயங்களில் அவள் முகத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/164&oldid=590822" இலிருந்து மீள்விக்கப்பட்டது