பக்கம்:பச்சைக்கனவு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி 0 187

அப்படின்னா ஒரு கை கொடுங்க. என்ன மயங்lங்க? இங்கே அதெல்லாம் பார்த்தா ஆவுங்களா? தலையையும் இடுப்பையும் சேர்த்தாப் போலப் பிடீங்க தலையைத் தொங்கவிடாதீங்க... ஆ... அப்படித்தான்!”

அவன் உதவியுடன், அவளைப் படுக்கையில் கிடத்தினார்கள். 'இந்த ஐஸ்" தண்ணியை அப்போதைக் கப்போ ஒரு ஒரு ஸ்பூனாய் வாயிலே விடுங்க, நாக்கு வறட்டாமே- நாங்க போறோம்!'

அவள் இன்னமும் கண் விழிக்கவில்லை. ஜலத்தை அவள் வாயுள் உட்ட முயன்றான். அரை மயக்கத்தில், * டாக்டர், டாக்டர் ஊசியைப் போட்டுக்குேத்தாதேயுங் களேன்” என்று தேம்பினாள்.

அவனுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. காது, மூக்கு, கழுத்தில் இருந்தவையெல்லாம் கழற்றிவிட்டு, முகமும் வெளுத்து, வசமுமிழந்து இப்பொழுது அவள் கட்டிலில் கிடக்கும் நிலையில், அவளைவிட அபலை உண்டா? ஜன்மத்தின் அகதிக்கே அடையாளமாய்,

அந்நிலைமை துண்டியேதானோ, அவனாவே. மறுநாளும் ஆஸ்பத்திரிக்குச் சென்றான். பலஹlனம் தெளியவில்லை; முகம் தெளிந்திருந்து கட்டிலில் சாய்ந்திருந்தாள். அவள் கண்கள் அவனை வரவேற்றன. தொண்டைப்புண் பேசவொட்டவில்லை. மடியில் ஒரு நோட்டுப் புத்தகமும் பென்சிலும் கிடந்தன.

நாற்காலியை நகர்த்திப் போட்டு அவளருகே உட்காந்தான். சுபாவத்திலேயே சற்று ஒட்டிய கன்னங்கள். ஆனாலும் முகத்தில் எடுப்பான நெற்றியிலிருந்து, கீழிறங்கும் அவைகளின் தீர்மானமான கோடுகள் சிறப்பாயிருந்தன. கண் ரப்பை மயிர்கள் நீண்டு, நுனி சுருண்டு, விழிகளுக்கு ஒரு அழகுச் சோகத்தையும் கனவுப் பார்வையையும் அளித்தன. மூக்கு சற்று நீளம் தான். பற்கள் வரிசையாய்ப் பளீர்வெண்மையுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/166&oldid=590824" இலிருந்து மீள்விக்கப்பட்டது