பக்கம்:பச்சைக்கனவு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 177

பழைய மாமாவும் இல்லை. அதுவும், கடந்த நாலைந்து வருடங்களாய் அவரை அவள் அநேகமாய்க் கட்டிலிலோ நாற்காலியில் சாய்ந்தபடிதான் கண்டிருக்கிறாள். சுக்கங் காயாய் வற்றிப்போன அந்தத் தேகத்தில் இதோ இப்பொழுது இந்தச் சமயத்திற்கென்று ஒரு புதுச் சக்தியை ஆவாகனம் பண்ணிக்கொண்டு முறுக்கேறிய சாட்டை போல் அவர் மணையில் அளித்த காட்சி, சாவித்ரிக்குக் கண்கொள்ளவில்லை.

மூன்று வருடங்களுக்கு முன்னால் பெரிய டாக்டர் சொன்னது இப்போத்தான் சொன்னமாதிரி இத்தனை சந்தடியிலும் நினைவில் ஒலிக்கிறது.

'பாட்டி. உங்கள் பிள்ளைகள் இங்கிருந்தால் உங்கள் கிட்டே சொல்லமாட்டேன். அ வ ர் க ள் கி ட் .ே ட சொல்லுவேன். அவர்கள் இங்கில்லை. அதனாலே உங்கள் கிட்டே சொல்லவேணும்.”

ஒரு கை அவளையும் அறியாமல் அடிவயிற்றை அமுக்கிக் கொண்டது.

என்னடாப்பா பயமுறுத்தறே?’’

"நீங்கள் அவரை நம்பாதேயுங்கள். எப்போது என்ன ஏதென்று சொல்ல முடியாது. அவர் உடம்புக்கு வந்திருக் கிறது அப்படி. நீங்கள் அவரை நம்பாதீர்கள். உங்கள் தாலியை இரும்பாலே அடித்துப் போட்டிருக்கிறது. அதனாலேதான் இதுவரைக்குமாவது தள்ளிக்கொண்டு வருகிறது. அதனாலே அதை நீங்கள் நம்புங்கள். அப்படி அவன் சொல்லி மூன்று வருஷங்களாச்சு. இதோ இன்று இன்னொரு தாலி கட்டிக்கொள்ளப் போகிறாள்.

அதைப்பற்றிப் பெருமிதமா? இல்லை. எதையோ சாதித்துவிட்டோமென்று மேட்டிமையா? இல்லை, இல்லை. ஒரு பரவசந்தான் புரிகிறது, நீண்ட நடை வழியிலே சுமைதாங்கியைக் கண்டாற்போல்,

32 سب {_i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/186&oldid=590844" இலிருந்து மீள்விக்கப்பட்டது