பக்கம்:பச்சைக்கனவு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 0 லா. க. ராமாமிருதம்

திடீரென அவளைச் சுற்றி ஒரே கரகோஷமும் ரேழி யிலிருந்து கெட்டிமேளமும் எழவே விழித்துக் கொண் டாள். அவள் மேல் புஷ்பமாரியும் மங்கல அட்சத்தையும் பெய்து கொண்டிருந்தன.

'பானகம்! பானகம்! வாங்கிக் கொண்டீர்களா? இந்தாருங்கோ, இந்தாருங்கோ, இன்னொரு தடவை. இந்தாருங்கோ!'

'ஆனந்தம் ஆனந்த மாயனே!' கழுத்துச் சங்கிலியில் மாட்டிக்கொண்ட புஷ்ப சரத்தைச் சாவித்ரி பிடித்து இழுத்தாள். அந்த வேகத்தில் கொண்டை அவிழ்ந்தது.

'இதென்ன, சாவித்ரி மாமி பின்னிக் கொள்ள வில்லையா எ ன் ன? மாமாவுக்கும் குடுமியில்லை. எப்படியடி முடிச்சுப் போடுகிறது?’’

ஒவ்வொரு கல்யாணத்திலும் இதே வேடிக்கைதான், இதே வார்த்தைகள்தாம். ஆனால் அலுக்கிறது மாத்திரம் இல்லை. ஏனோ தெரியவில்லை.

'என்ன இது? மேல் வேஷ்டியை நெய்த் தொன்னை யிலே தோச்சுண்டிருக்கேளே! அடடா பட்டு, புத்தம் புதிசு' என்று சாவித்ரி தன் கணவரைக் கடித்தாள்.

'இதென்ன மானங்கெட்டிருக்கேள் மாமி தாலி கட்டி மூணு நிமிஷமாகவில்லை. அதற்குள்ளே மாமாவோடே உங்களுக்கு என்ன பேக்சு? பெரியவர்கள் நீங்கள் எல்லாமே. இப்படி வழி காட்டினால் சிறிசுகள் நாங்கள் எப்படி இருப்போம்?”

இது சுந்தாதான். அவள் கிளப்பிவிட்ட சிரிப்பு கூடம் முழுவதும் குன்றிமணிகளை இறைத்தாற்போல் கிளுகிளுக்கிறது.

கல்யாணக்கூடத்தில் ஆளுயரத்திற்கு மாட்டியிருக்கும் கண்ணாடியில் தற்செயலாய் சாவித்ரியின் கண் விழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/191&oldid=590849" இலிருந்து மீள்விக்கப்பட்டது