பக்கம்:பச்சைக்கனவு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் O 27

கையை நாடி, விரலோடு விரல் பின்னி இழுத்து மார்பின் மேல் வைத்துக் கொண்டாள்.

'பாருங்கள், தான் கறுப்பாயிருந்தாலென்ன? என் இதயம் உங்களுடையது மாதிரியேதான் துடிக்கிறது. வேனுமானால்...'

'நன்றாகத்தான் துடிக்கிறது. கறுப்பாயிருப்பவர் களின் ரத்தத்திற்கே படபடப்பு அதிகம் என்று சொல் வார்கள். நான் கறுப்பாயில்லையே என்றுதான் எனக்கு இருக்கிறது.'

"இரண்டு பேரும் ராகமாய் விட்டால் அப்புறம் ராகத்தை வாசிக்க யாராவது வேண்டாமா? அதனால்தான் என் கவி சிவப்பாயிருக்க வேண்டும். நான் ராகம்கறுப்பாகத்தானிருப்பேன். என்னைக் கட்டி வாசிக்கும் என் கவி சிவப்பாகத்தானிருக்க வேண்டும். கவிக்கு ராகம் வேண்டுமெனில் ராகத்திற்கும்தான் கவி வேணும்-'

"நாம் இருவரும் கொஞ்ச நாள் பிரிந்திருந்து பார்ப்போமே!’ என்றேன்.

இப்போது சொல்லிவிடுகிறேன். இதுதான் எங்கள் வாழ்க்கையின் அடிப்படையான பெருங்குறை. எங்கள் ஒற்றுமை.

சில ஒற்றுமைகள் இருக்கின்றன. நாசத்திற்கே வித்தான பயங்கரமான ஒற்றுமைகள். காற்றுடன் நெருப்பு, விளக்கோடு விட்டில், மூங்கிலோடு மூங்கில்.

அவள் கண்கள் திறந்தன. படுத்திருந்த போதிலும் பாய்ச்சலில் பதுங்கிய சிறுத்தைப் போல் ஜாக்கிரதை யானாள்.

"ஏன்? நான் என்னத்தைப் பண்ணி விட்டேன்? என் மேல் என்ன கோபம்?' என்று கேட்கவில்லை.

g

'வெறுமென, இருந்து பார்ப்போம்!' என்றேன். உனக்கு உன் பிறந்த வீட்டிற்குப் போக வேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/36&oldid=590694" இலிருந்து மீள்விக்கப்பட்டது