பக்கம்:பச்சைக்கனவு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 o லா. ச. ராமாமிருதம்

நீண்டு, தளர்ந்து, மறுபடி தம் செதுக்கிய அமைதியில் சமைந்தன.

அவன் புன்னகை புரிந்தான். எப்பவோ அவன் கை இன்னொரு வளையலைப் பொறுக்கி அடுக்க ஆரம்பித் தாயிற்று.

எக்கட, எந்த தூரம்?’’

அடுக்கும் நேரத்துக்கு ஏதோ ஒரு பேச்சு. அவள் பேச்சு புரியாது. ஆனால் பேசிக் கேட்கணும், அதில் ஒரு சபலம்; அவள் கையைப் பற்றி உட்காந்திருக்கும் நேரத்தை நீட்ட ஒரு சாக்கு.

'ம்ம...?' வளையலில் பதிந்த அவள் நாட்டம் நிமிர்ந்தது. ஆமா, இன்னும் நொம்ப தூரம் போவனும், மூணு கல் தாண்டனும் போயி, சோறு ஆக்கணும். வரவேளைக்கு கொயம்பு காச்சி வெக்காட்டி பலி போட்டுடுவான். தண்ணிக்கு நேரமா, வேளையா, மண்ணா?”

சட்டென்று, அச்சத்துடன் அவனை உறுத்து, நோக்கினாள். ஆனால் அந்த முகத்தில் ஒரு அசட்டு இளிப்புத் தவிர, சொன்னது புரிந்துகொண்ட சோடை இல்லை. அவளுக்கு சிரிப்பு பீறிட்டது. இது நொம்ப வேடிக்கையில்ல; நொம்ப நொம்ப டமாஸு. திடீரென்று ஒரு வெறிக் களிப்பு கண்டு, கிசுகிசுவென அவனுடன் வேகமாய்ப் பேசத் தலைப்பட்டாள்.

"ஆமா, ஒன்கிட்ட சொல்றேன். யாருகிட்டாவது சொல்லியாவணுமில்ல? எத்தினி நாளிக்குப் பொத்திவெக்க ஆவும்: ஆட்டுக்குத்தான் ரகசியம் தெருவுக்கு சிரிப்பு. ரகசியம்னா அதானே! ஒன் கிட்ட சொன்னா என்ன? அட, யார்கிட்ட சொன்னாத்தான் என்ன? என் புருசன் குடிப்பான். நல்லா குடிப்பான். மொடா மொடாவா உள்ளே தள்ளுவான். தென்னங்கள்ளு, ஈச்சங்கள்ளு. ஏதாச்சாயினும் சரி. ஈ, எறும்பு, தேளு, கறுப்பான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/57&oldid=590715" இலிருந்து மீள்விக்கப்பட்டது