பக்கம்:பச்சைக்கனவு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடிாயணி O 73

கையைக் கொடுங்களேன்! பற்றி இழுத்து இரு கைகளி லும் பொத்திக்கொண்டாள்.

"கையைப்பற்றிப் பேசுகையில், கையைத் தொடனும் போல் ஏக்கமே ஏற்படுகிறது.”

'தாrாயணி, இவர் தான் உன் பாட்டு வாத்தியார். இவரிடம் உன்னைப்பற்றி ரொம்பவும் சொல்லியிருக் கிறேன்.'

'நான் கை கூப்பினேன். நீங்கள் நின்ற நிலை மாற வில்லை. ஆனால் மெதுவாய் முகம் மாத்திரம் என் பக்கம் திரும்பிற்று. இறைஞ்சலில் ஏந்திய என் கைகள் இறங்க மறந்தன.”

'என் முகத்தில் அப்போது நீ என்ன கண்டாய்? தயவு செய்து சொல்லேன்.'

'உங்கள் கேள்வி பெரிய கேள்வி. என்னென்று பதில் சொல்வேன்! அந்த நிமிஷத்தையேதான் இப்பவும் நினைத்துக் கொள்கிறேன். நினைக்க நினைக்க விவரங்கள் பிரளயமாய்ப் பெருகுகின்றன. எதையென்று எடுத்துச் சொல்வேன்.'

'இல்லை, பார்வையின் அந்த rணப்பதிவில் என்னில் என்ன கண்டாய்? சொல்லேன்!'

'கல் விக்கிரகம் முகம் திரும்பினாற்போல் 'திக்" கென்றது. அதற்குமேல் என்னைக் கேட்காதேயுங்கள். எனக்குச் சொல்லத் தெரியவில்லை."

'இல்லை, சொல்; சொல்! உன்னைக் கெஞ்சுகிறேன். சொல்லேன்! நீ சொல்லச் சொல்ல எனக்குப் பலம் ஊறுகிறது.'

“ஒரு தினுசாய் அடிவயிற்றைத் துண்டம் போட்டது. பழுதையென்று நினைத்துப் பாம்பைத் தூக்கிவிட்டேன் போல், பக்’கென்று சில்லிட்டுக்கொண்டு ஒர் அதிர்ச்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/82&oldid=590740" இலிருந்து மீள்விக்கப்பட்டது