பக்கம்:பச்சைக்கனவு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 o லா. ச. ராமாமிருதம்

முதலில் 'பக்” , அப்புறந்தான், திகில், குழறல், கூக்குரல் எல்லாம்."

'உன் பாஷைக்குத் தலைவணங்குகிறேன்.'

"என் நெஞ்சில் உடனே பதிந்தவை யாவை? உங்கள் நெற்றிமேட்டில் கட்டைவிரல் நகத்தளவில் வளைவாய் ஒரு வடு இருக்கிறதே அது.'

அவன் அதைத் தொட்டுக்கொண்டான். சின்ன வயசில் திண்ணைக்குத் திண்ணை தாவிக் கீழே விழுந்து விட்டேன்.”

'உங்கள் முகத்தில் கடுகடுப்பு இல்லாவிட்டாலும் அதில் கடினம் இருந்தது. உங்கள் கண்களில் கனிவு ஏன் இல்லை? இப்படிக் கண்டது என் கண்களின் குற்றமோ?"

"என் கண் லேசாய்ப் பூனைக் கண். அதனாலேயே என் பார்வையில் அதற்கு இல்லாத உக்கிரம் இருக்கலாம்.'

'இல்லை, நாம் இப்பொழுது கண்ணால் கண்டது மாத்திரம் பேசவில்லை. கண் கண்டதால் நெஞ்சு கண்டது. கண்டுகொண்டிருக்கிறோம். ஆகையால் உங்களிடம் நான் கண்டது உங்கள் கண்களின் உக்கிரம் அல்ல. உங்கள் உள் தன்மையின் உக்கிரமேதான். அதை நீங்களும் உடனே நிரூபித்துவிட்டீர்கள்.'

'உன் தகப்பனாருக்கு உன்மேல் இருக்கும் பாசத்தில் அவர் உன் சங்கீதத்தைப்பற்றிச் சொன்னதெல்லாம் காதில் வாங்கிக்கொண்டேனே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை. இது நாமே நேருக்கு நேர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அல்லவா?’ என்றீர்கள்,

என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் சொன்னது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அத்தோடு எடுத்தவுடன் நீங்கள் என்னை நீ என்றதும் அவருக்குப் பிடிக்கவில்லை. 'எனக்கும் சங்கீதத்தைப்பற்றித் தெரியும்' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/83&oldid=590741" இலிருந்து மீள்விக்கப்பட்டது