98
26. கமிட்டிகளை எவ்வாறு நியமிப்பது?
பஞ்சாயத்துச் சட்டமானது, ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் நியமனங்களைச் செய்யும் கமிட்டி குழு ஒன்றை அமைப்பதற்கு அதிகாரம் அளிக்கிறது. இக்குழுவானது கவுன்சில் த்லைவர், கமிஷனர் ஆகியோரையும் ஆண்டுதோறும் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒர் அங்கத்தினரையும் கொண்டதாக இருக்கும், கவுன்சிலின் தலைவரே குழுவின் தலைவர் ஆவார், கவுன்சிலின் கீழுள்ள எல்லாப் பதவிகளுக்கும் இந்தக் குழுவின் சம்மதத்தின் பேரிலேயே நியமனங்கள் செய்யப்பட வேண்டும். அவர்களுடைய சம்பளங்களை யூனியன் நிதியில் பற்று எழுத வேண்டும், அரசாங்கத்தின் உத்தரவுகளின்படி ஒரு வருஷத்திற்கு, குழுவின் அங்கத்தின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் அங்கத்தினர் ஒருவர், மறு வருஷத்தில், குழுவிற்கு வேருெரு அங்கத்தினரைத் தேர்ந் தெடுக்கும் வரையில் குழுவின் அங்கத்தினராகப் பதவியில் இருந்து வருவார்.
ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனிலும் ஒரு கல்விக் குழு வும், பொது அலுவல்கள் குழு ஒன்றும் இருக்க வேண்டும். சட்டப்படி கவுன்சிலுக்குள்ள கடமைகளையும் அலுவல்களை யும் செய்வதற்கு இத்ைப்போன்ற மற்ற குழுக்களைக் கவுன்சில் ஏற்படுத்தலாம். அரசாங்கம் உத்தரவிடுமானல் கவுன்சில் இதைப் போன்ற வேறு குழுக்களை ஏற்படுத்துவது அவசிய மாகும். இந்தச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு குழுவிலும் கவுன்சிலால் நிர்ணயிக்கப்படுகிற எண்ணிக்கை புள்ள அங்கத்தினர்கள் இருக்கவேண்டும். ஒவ்வொரு குழு விலும் தலைவர் உத்தியோக காரணமாக (எக்ஸ் அபிஷியோ) இருப்பார். ஒவ்வொரு குழுவிலும் உள்ள அங்கத்தினர்களில் தலைவரைத் தவிர மற்றவர்களைக் கவுன்சிலின் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கவேண்டும். சட்ட பூர்வமில்லாத மற்ற குழுக் கள் எல்லாவற்றினுடைய நடவடிக்கைகளையும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் முன் ஆஜர் செய்ய வேண்டும்.
எந்த ஒரு குழுவுக்கும் வெளியார்களை கூட்டு அங்கத்தினர் களாகச் சேர்த்துக் கொள்ளலாம் என்று கவுன்சில்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. பொது அலுவல்களின் குழு, கல்விக்கு குழு மற்றும் உள்ள குழுக்களுக்கு வெளியார் கள்ை, கூட்டு அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்வதுதான் அரசாங்கத்தின் உத்தேசம் என்று தெளிவாகக் கூறியுள்ளது.