பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108


தொழில்கள் என்பவை சமுதாய அபிவிருத்தியின் ேதசிய அபிவிருத்திச் சேவை திட்டத்துடன் சேர்க்கப்பட்டு: பஞ்சாயத்து யூனியன்களிடம் " ஏஜென்சி' அலுவலுகள் என்று ஒப்படைக்கப்பட்டுள்ளன. பஞ்சாயத்து யூனியன் களிடம் ஒப்படைக்கத் தகுதிபெற்ற ஏஜென்சி அலுவல்கள் பலவும் இருக்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமான அலுவல்கள் நீர்ப்பாசன Gద్దాడి ఊడి நடத்திவருவதும் குடி மராமத்தை நடத்தி வருவதும் ஆகும். 42. விளக்கு வசதி செய்வது எப்படி? ஒரு பஞ்சாயத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பொதுச் சாலைகளிலும் பொது இடங்களிலும் விளக்கு வசதி செய்ய வேண்டும் என அரசாங்கம் உத்தரவிடுமானல், அவ்விதம் விளக்கு வசதி செய்வது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் கடமையாகும். அவ்விதம் உத்தரவிடும் சந்தர்ப்பத்தில், விளக்கு வசதி செய்வதற்கு ஏற்படும் செலவின் பொருட்டு ஆரசாங்கம் நியாயமானது என்று கருதும் வகையில் வழி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அரசாங்கம் செய்யும் தீர்மானம் இறுதியானது. 43. பொது வைத்தியசாலைகளையும் தாய் சேய் நல விடுதிகள்ே யும் நடத்துவது எப்படி ? இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பஞ்சாயத்து யூனி யன் கவுன்சில்கள் பொதுவான வைத்தியசாலைகளையும் (டிஸ் பென்சரி) சேய்நல விடுதிகளையும் இவைபோன்ற ஸ்தாபனங் களையும் ஏற்படுத்தி நடத்தலாம். 44. தர்ம பரிபாலனச் சொத்துக்களை நிர்வகிப்பது எப்படி ? ஒரு பஞ்சாயத்து யூனியனின் சம்மதத்துடன், எந்த ஒரு தர்ம பரிபாலனச் சொத்துக்களையும் நிர்வாகம் செய்வதும் மேற்பார்வை செய்வதுமான வேலைகளை ரெவினியூ போர்டு அதனிடம் ஒப்படைக்கலாம். 45. பொதுச்சாலைகள் யாரைச் சேர்ந்தவை ? ஒரு பஞ்சாயத்து யூனியனில் இருக்கிற பஞ்சாயத்து யூனி யன் ரோடுகள் என்று வகைப்ப்டுத்தப்பட்டுள்ள எல்லா பொதுச் சாலைகள், அவற்றில் உள்ள க்ட்டுக்கோப்பு எல்லாவற்