உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

124 றது. இவ்விதம் ஒப்படைக்கப்படுகிற பொறுப்பை நிறை வேற்ற பஞ்சாயத்து யூனியன்களுக்கு உதவும் பொருட்டு, “ ஸ்தல நீர்ப்பாசன மான்யம் என்று பெயருள்ள ஒரு தனிப் பட்ட மான்யம் பஞ்சாயத்துகளுக்குக் கொடுக்கப் படுகிறது. இந்த மான்யத் தொகையை அந்த அந்த இடத்திற்குச் சம்பந்தப்பட்ட கலெக்டர் நிர்ணயம் செய்கிருர் ; அவரே கொடுக்கிருர், 72. குடி மராமத்து மான்யம் எவ்வளவு ? நீர்ப்பாசன ஆதாரங்களில் சில மாதிரி வேலைக்கு கூலி வில்லாமல் உழைப்பைத் தர வேண்டும் என 1958 ஆம் வருஷத்து சென்னை கட்டாய உழைப்புச் சட்டம் ஒரு வழக்க மான கடமையை விதிக்கிறது. பஞ்சாயத்து யூனியன் கவுன் சில் இந்த வழக்கமான கடமையைத் தானே ஏற்றுக் கொண்டு அதை நிறை வேற்றி, அதல்ை ஏற்படும் செலவுக்காகச் சட்ட ரீதியான கட்டண்ம் ஒன்றை விதிக்கலாம் என்று 85 (2) பிரிவு அதிகாரம் அளிக்கிறது, குடி மராமத்து வேலையைச் செய் வதற்குக் குறைந்தது ஒரு மாதம் முன்பாக, ஒரு வருஷ காலத் தில் அப்படிப்பட்ட வேலைக்கு ஆகக் கூடிய செலவை சுமாராக மதிப்பிட வேண்டும். இவ்விதம் செய்வதால் குடியானவர் கள் கொடுக்க வேண்டிய தொகையை வசூலிக்கவும் அவசிய மான சந்தர்ப்பங்களில் எல்லாம் அதிகப்படியான குடி மராமத்து மான்யத்தை அரசாங்கத்தினிடமிருந்து வசூலிக்க வும் முடியும். எந்த ஒரு வருஷ்த்திலும் ஒர் ஏக்கராவுக்கு ஒரு ரூப்ாய் வரையிலும் குடி மராமத்து வேலைகளுக்காகச் செலவு செய்தால் அதைச் சாதாரணமான குடி ம்ராமத்து என்று என்று கருத வேண்டும். இந்த எல்லையை மீறி அதிகமாகச் செய்யப்படும் செலவை அதிகப்படியான குடி மராமத்துச் செலவில் 2/3 பாகத்தை அரசாங்கம் மான்யமாகக்கொடுக்கும். ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், குடி மராமத்துச் செய்வதில் ஈடுபடும்ப்ொழுது, அந்த பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலால் பாதுகாக்கப்படவும் பராமரிக்கப்படவும் வேண்டி அதனிடம் மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு நீர்ப்பாசன ஆதாரத்திலிருந்து தண்ணிரைப் பெறுகிற ரிஜிஸ் தர் பதிவுள்ள நிலச் சொந்தக்காரர்கள் எல்லோரிடத்திலும் கலெக்டர் தீர்மானம் செய்கிற விகிதங்களின்படி, வருஷ வாரிக் கட்டணம் விதிக்கலாம். நேரிடையாக நீர்பாய்கிற் நிலங்களின் மீது பாகுபாடில்லாமல் ஒரே விகிதத்தில் இந்தக்