156 123. அப்பீல்களுக்கான கால வரம்பு என்ன? சட்டத்தின்படி அல்லது அதன் கீழ் செய்யப்பட்டிருக்கிற விதிகளின்படி, வேறு விதமாகக் கூறப்பட்டிருந்தாலன்றி, அப்பீல்கள் எல்லாக் கலெக்டருக்குச் செய்து கொள்ளப்பட வேண்டும். அவற்றிற்கான கால வரம்பு பின்வருமாறு: ஒரு லைசென்ஸ் கொடுக்கிற உத்தரவு, அல்லது அனுமதி கொடுக்கிற உத்தரவு ஆகியவற்றிற்கு எதிராகச் செய்து கொள்ளப்படுகிற அப்பீல், பஞ்சாய்த்து யூனியன் கவுன்சிலின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்ட தேதியில் இருந்து முப்பது நாட்களுக்குள் ; மற்ற சந்தர்ப்பங்களில், எந்த உத்தரவுக்கு எதிராக அல்லது நடவடிக்கைக்கு எதிராக அப்பீல் செய்துகொள்ளப் படுகிறதோ, அந்த உத்தரவு அல்லது நடவடிக்கை கிடைத்த முப்பது நாட்களுக்குள். 124. வரிகளை வசூலிப்பவர் யார்? பஞ்சாயத்துக்கு அல்லது பஞ்சாயத்து யூனியனுக்கு அவ்வப்பொழுது சேர வேண்டிய எல்லா வரிகளையும் கட்டணங் களேயும் வசூலிப்பது கிராம உத்தியோகஸ்தருடைய கடமை களின் பகுதியாக இருக்கிறது. வரி விதிப்பு ரிஜிஸ்தர்களையும், பஞ்சாயத்துக்கும் பஞ்சாயத்து யூனியனுக்கும் சேரவேண்டிய வரிகளை வசூலிப்பதற்கு உதவியாக இருக்கிற மற்ற தஸ்தா வேஜுகளையும் அவ்வப்பொழுது நிர்ணயிக்கிறபடி அவர் வைத்திருக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/190
Appearance