44 26. வாக்காளரை ஆட்சேபித்தல் (1) போட்டியிடும் ஒரு அபேட்சகர் அல்லது ஒட்டுச் சாவடி ஏஜண்ட், எவரேனும் ஒரு நபர் வாக்குச் சீட்டை ஆள் மாருட்டம் செய்து பெற முயன்ருர் என அறிவித்து அதை நிரூபிக்க முன்வந்தால், ஒட்டுச்சாவடி அலுவலர், ஆள் மாருட்டக் குற்றச் சாட்டுகளே கொண்டுவருகிற் அபேட்சகர் அல்லது ஏஜண்டை ஐந்து ரூபாய் ரொக்கமாக தன்னிடம் டெபாஸிட் செலுத்தும்படி கேட்க வேண்டும். ஒவ்வொரு குற்றச் சாட்டுக்கும் தனித்தனியாக டெபாஸிட் தொகை செலுத்தப்பட வேண்டும். அத்தகைய டெபாஸிட் செய்யப்படாவிட்டால், ஒட்டுச்சாவடி அலுவலர் குற்றச் சாட்டை நிராகரித்து விடலாம். (2) துனே விதி (1) இன் படி டெபாஸிட் தொகை செலுத்தப்பட்ட பிறகு, உ ட ன் டி ய க ஒட்டுச்சாவடி அலுவலர், வாக்குச் சீட்டு கேட்கும் நபரை, அவரது பெயர், வில்ாசம் முதலியவற்றை 'ஆட்சேபிக்கப்பட்ட வாக்காளர் ஜாபிதா’வில் எழுதும்படி கேட்க வேண்டும். இது 7-வது நமூவிைன்படி இருக்கவேண்டும். மேலும், அவர் அந்த ஜாபிதாவில் அந்த நபரைக் கையொப்பமிடும்படி கேட்க வேண்டும். அவருக்கு கையொப்பமிடத் தெரியாவிடில் அவருடைய கைப்பெருவிரல் அடையாளத்தை பதியும்ாறு கேட்கவேண்டும். அன்றியும் தான் இன்னுர் என்பதை அடையாளம் காட்டுவதற்கான சான்று இதழைக் கொண்டு வந்து காட்டுமாறும் கேட்கவேண்டும். (3) ஒட்டுச்சாவடி அலுவலர் அதன்பிறகு, மேற்படி ஆட்சேபனை குறித்து சுருக்கமான முறையில் ஒரு விசாரணை நடத்தவேண்டும் ; அதற்காக (அ) ஆட்சேபனைக்கு அத்தாட்சி தருமாறு ஆட்சேபித் தவரைக் கேட்கலாம் ; தாம் தான் அந்த வாக்காளர் என்ப தற்குச் சான்று த ரு ம் படி ஆட்சேபிக்கப்பட்டவரைக் கேட்கலாம். - . (ஆ) ஆட்சேபிக்கப்பட்டவர் இ ன் ைர் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவரை அவசியமான கேள்விகள் கேட்கலாம்; பிரமாணம் எடுத்துக்கொண்டு அவற்றிற்குப் பதில் கூறும்படியும் கேட்கலாம். (இ) ஆட்சேபிக்கப்பட்டவருக்கும் சாட்சி கூற விரும்பும் வேருெரு நபருக்கும் பிரமாணம் செய்து வைக்கலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/239
Appearance