102 கெடுப்பு அறையை தேர்தல் அலுவலர் ஏற்படுத்த வேண்டும். மேலும், வாக்குச் சீட்டுகளேப் பெறுவதற்காக தம் முன் ஒரு வாக்குப்பெட்டியை அவர் வைக்க வேண்டும். வாக்குச் சீட்டுகளே அந்த வாக்குப் பெட்டியில் போட்டால், அந்தப் புெட்டியை திறந்தால் அல்லது பூட்டைத் திறந்தால் அன்றி, வாக்குச் சீட்டுகளை வெளியே எடுக்க முடியாதபடி அந்த் வாக்குப் பெட்டி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 9. தேர்தல் அலுவலர், வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு உடனடியாக, வந்திருக்கும் வாக்காளர்களுக்கு வாக்குப்பெட்டியைத் திறந்து காட்ட வேண்டும். அப்போது வாக்குப்பெட்டிகள் காலியாக உள்ளதை அ வ ர் க ள் அறிவார்கள். பிறகு அவர், வாக்குப் பெட்டியைப் பூட்டி முத்திரையிடுவார். முத்திரையை உடைக்காமல் பெட்டியை திறக்க முடியாது. 10. வாக்களிக்க விரும்பும் ஒவ்வொரு வாககாளருககும் ஒரு வாக்குச் சீட்டு கொடுக்கப்படும். கீழ்க்காணும் நமூணுப் படி ஆங்கிலத்திலும் தமிழிலும் அபேட்சகர்களின் பெயர்கள் தெளிவாக அதில் எழுதப்பட்டிருக்கும். வாக்குச் சீட்டு ...........மாவட்ட அபிவிருத்தி மன்றம் மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினராக தேர்ந் தெடுக்கப்பட முறைப்படி நியமனம் செய்யப்பட்ட அபேட் சகர்களின் பெயர்கள் : தேர்தல் அலுவலா. வாக்குச் சீட்டை வாக்காளர்களிடம் கொடுப்பதற்கு முன் தேர்தல் அலுவலர் அதில் கையொப்பமிட வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/294
Appearance