பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#04 கரின் பெயருக்கு எதிரில் அது போடப்பட்டது என்று சந்தேகம் எழக்கூடிய விதத்தில் அது இருந்தால், அந்த வாக்குச் சீட்டு செல்லாது. (இ) ஒரு அபேட்சகரின் பெருக்கு எதிரில் 'X' குறியும் வேறு ஏதாவது ஒரு குறியும் போடப்பட்டிருந்தால் அது செல்லாது. (ஈ) வாக்காளரை இன்னர் என்று அடையாளம் ரிந்து கொள்ளும் வகையில் ஏதாவது ஒரு குறி, வாக்குச் ல் போடப்பட்டிருந்தால் அது செல்லாது. 16. பெரும்பான்மையான வாக்குகள் பெறும் அபேட் சகர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அபேட்சகர்களின் விாக்குகள் சமமாக இருந்து, அதில் யாருக்கு ஒரு வாக்கு அதிகமாக கிடைத்தால், அவர் முறைப்படி தேர்ந்தெடுக்கப் படுவார் என்று இருந்தால் தேர்தல் அலுவலர் வாக்காளர்கள் முன்பு சீட்டுக் குலுக்கிப் போட்டு யாருக்கு அதிகப்படியான வாக்கு கிடைக்கும் என்பதை தீர்மானிப்பார். . 17. கூட்டம் முடிவடைந்த பிறகு, தேர்தல் அலுவலர், கூட்ட நடவடிக்கைகள் பற்றிய குறிப்பு ஒன்றை தயாரித்து அதில் கையொப்பமிட வேண்டும். அதில் செய்யப்படும் ஒவ்வொரு திருத்தத்துக்கும் அவர் சுருக்க கையொப்பமிட வேண்டும். யாரேனும் ஒரு வாக்காளர், அந்தக் குறிப்பில் தாம் கையொப்பமிட விரும்பினுல் அதற்கு தேர்தல் அலுவலர் அனுமதிக்கலாம். மேலும் அதன் நகல் ஒன்றை மாவட்ட கலெக்டிருக்கு அனுப்ப வேண்டும், - sG. O. No. 1996. L. A. 27—11—1959]