பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை, பஞ்சாயத்துகளின் சட்டம் (The Madras Panchayats Act, 1958) [Madras Act XXXV of 1958 முதல் பகுதி 1. சுருக்கமான பெயர்-அமுலுக்கு வரும் பகுதிகள்ஆரம்பம் :- - (1) இந்தச் சட்டமானது 1958-ம் வருஷத்திய சென்னை ராஜ்ய பஞ்சாயத்துகளின் சட்டம்’ என்று வழங்கப்படும். (2) சென்னே நகரம், 1920-ம் வருஷத்திய சென்னே முனிசிபாலிட்டிகளின் சட்டப்படி நிர்வகிக்கப்படும் முனிசி பாலிட்டிகள், 1924-ம் வருஷத்திய கண்டோன்மெண்டுகள் சட்டத்தின்படி நிர்வகிக்கப்படும் கண்டோன்மெண்டுகள், 1940-ம் வருஷத்திய மேட்டுர் டவுன்ஷிப் சட்டத்தின்படி நிர்வகிக்கப்படும் மேட்டுர் நகரம், 1954-ம் வருஷ்த்திய் குற்ருலம் டவுன்ஷிப் சட்டத்தின்படி நிர்வகிக்கப்படும் குற்ருல நகர், 1954-ம் வருஷத்திய பவானி சாகர் டவுன்ஷிப் சட்டத்தின்படி நிர்வகிக்கப்படும் பவானி சாகர் ஆகிய இந்த இடங்கள் நீங்கலாக மற்ற எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சட்டம் அமுலுக்கு வரும். (3) இந்தப் பிரிவும் 196-வது பிரிவும் உடனடியாக அமுலுக்கு வரும். மற்றப் பிரிவுகளே எல்லாம் 1961-ம் வருஷம் அக்டோபர் மாதம் 2-ந் தேதிக்கு அப்பால் போகாத ஒரு தேதியை அரசாங்கம் குறிப்பிட்டு, அதை விளம்பரப் படுத்தி அவ்விதம் குறிப்பிடப்பட்ட தேதி முதல் அமுலுக் குக் கொண்டு வரும். இந்தச் சட்டத்தின் வெவ்வேறு ஷ்ரத்துக்களுக்கும் வெவ்வேறு இடங்களுக்கும் வெவ்வேறு தேதிகளை நிர்ணயம் செய்யலாம். - 2. விளக்கம் : இந்தச் சட்டத்திலே காணப்படும் சொற்கள் சிலவற்றிற்கு அர்த்தம் இதுதான் என்று திட்ட வட்டமாக வரையறுத்துக் கூறப்படுகிறது. சட்டத்திலே வேறு வகையாகக் குறிப்பிடாத வரையில், கீழ்க்கானப் படும் சொற்களுக்கு அர்த்தம் வருமாறு: '