#48 அமுலாக்கினல் மனித உயிருக்கோ, சுகாதாரத்துக்கோ அல்லது பொதுஜன பாதுகாப்புக்கோ ஆபத்து ஏற்படும் என்று தலைவர் கருதினாலும் நிர்வாக அதிகாரி இவ்விஷயத்தை அரசாங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இது சம்பந்தமாக அரசாங்கத்தின் தீர்ப்பே முடிவானதாகும். (b) பஞ்சாயத்தின் எல்லா உத்தியோகஸ்தர்களும் ஊழியர்களும் நிர்வாக அதிகாரியின் கட்டுப்பாட்டுக்கு அடங்கியவர்கள். (c) நிர்வாக அதிகாரி, இந்தச் சட்டத்தால், அல்லது இந்தச் சட்டத்தின்கீழ் நிர்வாக அதிகாரிக்கென ஏற்பட் டுள்ள கடமைகளே எல்லாம் நிறைவேற்றவும் அதிகாரங்களே எல்லாம் செலுத்தவும் மேலும், இச்சட்டத்தின்கீழ் விதிக்கப் பட்டுள்ள வரையறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட் பட்டு இதன் ஏற்பாடுகளே எல்லாம் நிறைவேற்றுவதற்காக நிர்வாக அதிகாரத்தை செலுத்த வேண்டும். மேலும், அவற்றின் நோக்கம் ஒழுங்காக நிறைவேற்றப்படுவது அவருடைய நேரடியான பொறுப்பாகும். - கமிஷனர் 44. கமிஷனர்கள் (1) அரசாங்கம், ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு ஒரு கமிஷனரை நியமிக்கும். அவர், சாதா ரணமாக, பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதிக்காக, தேசிய விஸ்தரிப்பு சேவைத் திட்டத்தை அனுசரித்து, நியமிக்கப் பட்ட அபிவிருத்தி அதிகாரியாகவும் இருப்பார். - - (2) கமிஷனருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம், அலவன் லகள், அல்லது லீவுகால அலவன்ஸுகள், பென்ஷன், பிராவிடண்ட் பண்ட் சம்பந்தமாக யூனியன் கவுன்சிலி லிருந்து பணம் எதையும் வசூலிக்கக் கூடாது. (3) உட்பிரிவு (1)ன்படி கமிஷனர்களே நியமிப்பது, தரம் பிரிப்பது, அவர்களுடைய சம்பளம், அலவன்ஸ், ஒழுங்கு நடத்தை, சேவைக்கு உரிய நிபந்தனைகள் ஆகிய் வற்றை முறைப்படுத்த அரசாங்கத்துக்கு உரிமை உண்டு. (4) கமிஷனர்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/339
Appearance