உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 நிர்வாக அறிக்கைகள் 54. பஞ்சாயத்துகளின் நிர்வாக அறிக்கைகள் (1) ஒவ்வொரு பஞ்சாயத்தும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் உரிய அதன் அறிக்கை ஒன்றை, அந்த ஆண்டு முடிவுக்குப் பின், கூடிய விரைவில் குறிப்பிடப்படும் தேதிக்குப் பிற்படாமலும் குறிப் பிட்ட நமூனவிலும் (form) விவரங்களுடன் நிர்ணயிக்கப் பட்ட அதிகாரி மூலம் அனுப்ப வேண்டும். (2) அந்த அறிக்கையை நிர்வாக அதிகாரி தயார் செய்ய வேண்டும். அறிக்கையைப் பஞ்சாயத்து பரிசீலனே செய்து, அதன்மீது நிறைவேற்றப்படும் தங்களுடைய தீர்மானத்துடன் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அனுப்ப வேண்டும். 55. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களின் நிர்வாக அறிக்கைகள் (1) ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலும் தத்தம் நிர்வாகம் குறித்தும், தமது யூனியனுக்குள் அடங்கி யுள்ள எல்லா பஞ்சாயத்துகளுடைய நிர்வாகம் குறித்தும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அந்த ஆண்டு முடிவுக்குப் பின்ன்ர், கூடிய விரைவிலும் குறிப்பிடப்படும் தேதிக்குப் பிற்படாமலும் ஒருங்கு இணைந்த அறிக்கையை குறிப்பிட்ட நமூனவில் (form) விவரங்களுடன் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரி மூலம் கலெக்டருக்கு அனுப்பிவைக்க வேண்டும். (2) இந்த அறிக்கையை கமிஷனர் தயார் செய்ய வேண்டும். பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் இந்த அறிக் கையைப் பரிசீலனை செய்து, அதன்மீது நிறைவேற்றப்படும் தங்களுடைய தீர்மானத்துடன் கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். (3) அந்த ஜில்லாவிலுள்ள பஞ்சாயத்துகள், யூனியன் கவுன்சில்கள் நிர்வாகம் சம்பந்தமான் பொதுவான அறிக்கை ஒன்றை கலெக்டர் தயாரித்து, ஜில்லா அபிவிருத்தி சபை (மாவட்ட அபிவிருத்தி மன்றம்) முன் வைக்க வேண்டும். அந்த அறிக்கையை, ஜில்லா அபிவிருத்தி சபை நிறை வேற்றும் தீர்மானத்துடன் அரசாங்கத்துக்கு நிர்ணயிக்கப்