365 (i) பஞ்சாயத்து யூனியன் மார்க்கட்டுகள் என்று வகைப் படுத்தப்பட்டவைகளே ஏற்படுத்தி பராமரித்தல்; (k) ஜனன மரணப் பதிவுப் புள்ளிவிவரங்களே முறைப் படுத்தல்; - (1) சத்திரங்களே ஏற்படுத்தி பராமரிப்பது; (m) விவசாயத்தை சீர்திருத்துவது. வி வ ச | ய க் காட்சிகளே நடத்துவது; (n) குடிசைத் தொழில்களுக்கு ஊக்கமளித்து வளர்ப்பது. 66. சமுதாய நல வளர்ச்சியின் தேசிய விஸ்தரிப்பு சேவை திட்டம் நிறைவேற்றப்படுவதை, பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களிடம் ஒப்படைத்தல். இந்தச் சட்டத்தின்படி, பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிக்காக ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அமைக்கப்பட்ட பின், கூடிய விரைவில், அரசாங்கத்தால் குறிப்பிடப்படும் கட்டுப்பாடுகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டு, அந்தப் பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியின் சமுதாய நல வளர்ச்சியின் தேசீய விஸ்தரிப்பு சேவை திட்டத்தின் எல்லா நடவடிக்கைகளேயும் குறிப்பாக, தனியார் அல்லது கூட்டுறவு அடிப்படையில் ஏற்படுத்தப் படுகின்ற விவசாயம், கால் நடை பராமரிப்பு, கிராமத் தொழில்கள், சம்பந்தமாக நிறைவேற்றுவதை பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிடம் ஒப்படைக்க வேண்டும். 67. சில விஷயங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அதிகாரம். இந்தச் சட்டத்தின் பிரிவுகளுக்கும் விதிகளுக்கும் இணங்க, ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நிதி நிலேமையின் அளவுக்கு 65-வது பிரிவில் குறிப்பிடப்பட் டிருப்பதை தவிர்த்து, பொது உபயோகமான பஞ்சாயத்து யூனியன் தேவைகளே நிறைவேற்றுவதற்கான நட வடிக்கைகளின் பொருட்டு, பஞ்சாயத்து யூனியனில் வசிப்போரின் பாதுகாப்பு, சுகாதாரம், வசதி, முன்னேற் றத்தைக் கருதி, பஞ்சாயத்து யூனியனின் கவுன்ஸிலுக்கு உசிதம் எனத் தோன்றும் நடவடிக்கைகளே மேற் கொள்ளலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/356
Appearance