உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 பட்டணத்திலும் வீட்டு வரி, தொழில் வரி, வாகன வரி ஆகியவற்றை விதிக்க வேண்டும். (2) 124-வது பிரிவை அனுசரித்து, ஒவ்வொரு பஞ்சா யத்து கிராமத்திலும் பட்டனப் பஞ்சாயத்திலும் சொத்து உரிமை மாற்றங்களின் மீது ஒரு தீர்வை விதிக்க வேண்டும். (3) நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு உட்பட்டு, இன்ஸ் பெக்டருடைய அனுமதியுடன், அவர் அனுமதி அளிக்கும் போது அவர் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் நிபந்தனை களுக்கும் இணங்க, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தானது கிராமத்தில் அல்லது நகரத்தில் குறிப்பிட்ட ஒரு காரியத் துக்காக, விவசாய நிலத்தின்மீது ஒரு வரி விதிக்கலாம். 120. விட்டு வரி (1) இந்தச் சட்டம் அமுலுக்கு வருமுன், சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் எந்த அடிப்படையில் வரி விதித்து வசூலிக்கப் பட்டதோ அதன் பிரகாரம் ஒவ்வொரு நகரத்திலும் கிராமத் திலும் உள்ள எல்லா வீடுகளுக்கும் வரி விதித்து வசூலிக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் விதிகள் மூலம், தரைப்பரப்பு அல்லது வருஷாந்தர வாடகை அல்லது மூலதன அடிப்படை யிலோ அல்லது மேற்குறிப்பிட்டவற்றில் இரண்டை அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ஒருங்கு சேர்த்து வரி விதிக்க வேண்டும் என நிர்ணயிக்கலாம். (2) வீட்டு மனே சம்பந்தமாக அரசாங்கத்துக்கு நிலவரி சேர வேண்டியிருந்தால் அதை முதலில் செலுத்துவதற்கு உட்பட்டு, வீட்டு வரியானது, அவ்வீட்டின் பேரிலும் அதற்குள் அல்லது அதன்மீது காணப்படுகிற, வரி செலுத்த வேண்டிய நபருக்கு உரிய அசையும் பொருள் (movable property) ஏதேனுமிருந்தால், அதன் பேரிலும் முதல் பொறுப்பாக ஏற்படும். (3) பஞ்சாயத்து நிர்ணயிக்கும் விகிதப்படி, வீட்டு வரி வருஷத்துக்கு ஒரு முறை விதிக்கப்படி_வேண்டும். இந்த விகிதமானது பஞ்சாயத்து அனுசரிக்கிற வரி விகிதத்தில் அடிப்படை சம்பந்தமாக வெடிட்யூல் 1ல் குறிப்பிட்டிருக்கிற அதிக பகஷத்துக்கு அதிகரிக்காமலும் குறைந்த பகடித்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும்.